டெக்
முதன்முறையாக, விண்வெளிக்கு வீரர்களை அனுப்புகிறது யுஏஇ!
முதன்முறையாக, விண்வெளிக்கு வீரர்களை அனுப்புகிறது யுஏஇ!
ஐக்கிய அரபு அமீரகம் முதன்முறையாக, இரண்டு விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பவுள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 'ஹோப்' என்ற திட்டம் 2021 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் இரண்டு நபர்களின் பெயரை ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீக் அல் மக் வெளியிட்டார்.
இதன்படி ஹஸ்ஸா அல் மசூரி மற்றும் சுல்தான் அல் நேயாதி ஆகிய இரு வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லவுள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்படவுள்ளனர். இதற்காக சுமார் 38 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.