டெக்
2 பெண் விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு
2 பெண் விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு
2020-ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 2 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
வேதியியலுக்கான நோபல் பரிசை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இம்மானுவேல் சார்பெண்டியர், ஜெனிஃபர் ஆகியோருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் தொடர்பான கண்டிபிடிப்புக்காக இவர்களுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் மருத்துவத்திற்கான நோபல்பரிசு மூன்று பேருக்கும், நேற்றைய தினம் இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கும் அறிவிக்கப்பட்டது.