விண்வெளியில் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்யா மற்றும் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர்களான தாமஸ் பெஸ்கியட் மற்றும் ஓலக் நோவிஸ்கி ஆகியோர் பத்திரமாகப் பூமிக்கு வந்து சேர்ந்தனர்.
இவர்கள் இருவரும் சுமார் 196 நாட்கள் விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்து வந்தனர். அவர்களைச் சுமந்து கொண்டு ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் பத்திரமாகத் தரையிறங்கியது. அவர்களுடன் விண்வெளிக்குச் சென்ற மற்றொரு ஆய்வாளர் மேலும் மூன்று மாத காலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
‘பூமிக்கு மீண்டும் திரும்பியதில் மகிழ்ச்சி. இந்த விண்வெளி ஆய்வு வெற்றிகரமானது. தரையில் விண்கலம் இறங்கும்போது கார் விபத்தை போல உணர்ந்தேன்’ என்று தெரிவித்தார் தாமஸ் பெஸ்கியட்.