
உலக அளவில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளங்களில் ஒன்றுதான் ட்விட்டர். இந்நிறுவனம் பயனர்களுக்காக புதியதொரு அம்சத்தை தற்போது சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொழில்நுட்ப செய்திகளை வெளியிட்டு வரும் ‘தி வெர்ஜ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமில்லாத திரெட்களில் தங்களது பெயர் ‘டேக்’ செய்யப்பட்டிருந்தால் அதனை ‘Untag’ செய்து கொள்ளலாம் என தெரிகிறது. அதற்காக “Leave This Conversation” என்ற அம்சத்தை ட்விட்டர் நிறுவனம் சேர்க்க திட்டமிட்டுள்ளதாம். இதன் மூலம் பயனர்கள் தங்களை குறித்த டேகை நீக்குவதோடு, அந்த திரெட் சார்ந்த நோட்டிபிகேஷனையும் நிறுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது Mute This Conversation அம்சத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது முற்றிலும் வேறுபாடு கொண்டது. இந்த புதிய அம்சத்தை பயனர்கள் பயன்படுத்தினால் குறிப்பிட்ட அந்த திரெட்டில் ஒரு பயனரை டேக் செய்யும் போது வரும் அவரது ஹைப்பர் லிங்காக ஒளிரும் அந்த பயனரின் பெயருக்கு மாற்றாக அந்த இடம் வெள்ளை நிறத்தில் இருக்கும் என தெரிகிறது.