இனி ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டுகளில் 3 சிம்கள்..!

இனி ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டுகளில் 3 சிம்கள்..!
இனி ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டுகளில் 3 சிம்கள்..!

இனி ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டுகளில் 3 சிம்கள்..!

வளர்ந்து வரும் டெக்னாலஜி யுகத்தில் நவீன தொழில்நுட்பத்தினால் தினம் தினம் புதிய படைப்புகள் வெளிவந்து கொண்டெ இருக்கின்றன. 2ஜி இருந்த கால கட்டங்கள் மறைந்து 5ஜி வந்துவிட்டது. அதே போன்று 1100 மொபைலில் ஒரே ஒரு சிம் போட்டு பேசிய காலங்கள் மறைந்து டூயல் சிம் வசதி வந்தது. அதற்கு மேல் ஒரு படி உயர்ந்து தற்போது 3 சிம் கார்கள் பயன்படுத்தக் கூடிய ட்ரிபில் சிம் அடாப்டர் ஒன்றை சுவிட்ஸர்லாந்தினை சேர்ந்த குழு ஒன்று வடிவமைத்துள்ளது.

ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல்களில் இந்த அடாப்டரை இணைத்து பயன்படுத்த முடியும். இதில் உள்ள E-கிளிப்கள் மூலம் மூன்று சிம்மை பொருத்தி பயன்படுத்தலாம். ட்ரிபில் சிம் அடாப்டர் இந்த வாரம் முதல் கிக்ஸ்டார் தளத்தில் விளம்பரப்படுத்தப்படவுள்ளது. கூகுள் ப்ளே ஸ்டோரில் 3SIMORE ஆப் பதிவிறக்கம் செய்து உங்கள் அடாப்டரின் E-கிளிப்களில் சிம்மைகளை பொருத்தி ஸ்மார்ட்போனில் இணைத்து பயன்படுத்தலாம். இந்த புதுமையான அடாப்டரை உங்கள் பாக்கெட்டிற்குள் வைத்து எடுத்து செல்லும் அளவிற்கு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com