20 ரூபாயில் 4 மாதம் வேலிடிட்டி..! Airtel, Jio & BSNL பயனர்களுக்கு குட் நியூஸ்! TRAI-ன் புதிய விதி!
தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்கள், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரீச்சார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தின. இதனால், அனைத்து தரப்பினருமே அதிருப்தியில் ஆழ்ந்தனர். குறிப்பாக, அலுவலக பணிகளுக்காக ஒரு சிம் கார்டையும், தனிப்பட்ட காரணங்களுக்காக personel ஆக ஒரு சிம் கார்டையும் பயன்படுத்துவோருக்கு, விலைவாசி உயர்வு பெரிய தலைவலியாக மாறியது.
இப்படியாக, தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களின் நெட்வொர்க்குகளில் இருந்து, பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கு பலரும் மாறினர். மலிவு விலை காரணமாக இந்த மாற்றம் அரங்கேறியது. விதிகளின்படி, ஒரு சிம்கார்டை மூன்று மாதத்திற்கு பயன்படுத்தாமல், அதாவது ரீச்சார்ஜ் செய்யாமல் இருந்தால், 90 நாட்களுக்குப் பிறகு அது காலாவதியாகிவிடும். அதன்படி பார்த்தால், இருக்கும் கடுமையான விலைவாசி உயர்வில், ஒரு சிம் கார்டுக்கு ரீச்சார்ஜ் செய்வதே கஷ்டமாகிவிட்ட சூழலில், 2வது சிம்மை கைவிடும் நிலைக்கு பலரும் தள்ளப்பட்டனர்.
TRAI கொண்டுவந்த புதிய விதிமுறை..
இந்த நிலையில்தான், ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் மற்றும் பிஎஸ்என்எல் உள்ளிட்ட நெட்வொர்க்குகளை பயன்படுத்துவோருக்கு புது விதிமுறையை கொண்டு வந்துள்ளது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI.
ஏற்கெனவே இருப்பதுபோல, ரீசார்ஜ் முடிந்த அடுத்த 90 நாட்களுக்கு சிம் கார்டு செயல்பாட்டில்தான் இருக்கும். இந்த 90 நாட்கள் முடியும்போது, சிம் கார்டில் 20 ரூபாய்க்கான பிரீப்பெய்டு திட்டம் இருந்தால், அது பயன்படுத்தப்பட்டு, அடுத்த 30 நாட்களுக்கு சிம் கார்டு செயல்பாட்டில் இருக்கும்.
அதன்பிறகு வேலிட் ஆன ரீசார்ஜ் செய்யப்படவில்லை எனில், மேலும் ஒரு 15 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படும். இந்த காலகட்டங்களில் கஸ்டமர் கேர் நம்பருக்கு அழைத்து பேசி, ரீச்சார்ஜ் செய்து சிம் கார்டை ஆக்டிவேட் செய்துகொள்ளலாம். ஆக, ஏற்கனவே கொடுக்கும் 90 நாட்கள் அவகாசம், 20 ரூபாய் பிரீப்பெய்டு திட்டத்தால் 30 நாட்கள் அவகாசம் என 120 நாட்கள், மற்றும் கூடுதல் அவகாசமாக 15 நாட்களையும் கொடுத்து செல்ஃபோன் பயனர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது TRAI.
இதன்மூலம் ஒரே சமயத்தில் 2 சிம்கார்டுகளையும் பயன்படுத்தும்போது ஏற்படும் சிக்கலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.