2020-ஒலிம்பிக் போட்டியில் பறக்கும் கார்

2020-ஒலிம்பிக் போட்டியில் பறக்கும் கார்
2020-ஒலிம்பிக் போட்டியில் பறக்கும் கார்

ஜப்பானைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டோக்கியோ மோட்டார் கார்ப்பரேஷன் டொயாட்டோவின் ஒத்துழைப்புடன் பறக்கும் காரை தயாரிக்கும் முயற்சியில் அந்தநாட்டை சேர்ந்த இளம் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

கார்ட்டிவேட்டர் என்ற பெயரிலான 30 பொறியாளர்கள் அடங்கிய குழு ஸ்கை ட்ரைவ் என்ற அந்த காரை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. 2020-ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் போது, இந்த பறக்கும் காரை கொண்டு ஒலிம்பிக் தீபத்தை ஏற்றும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கும் என இளம் பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 2025 இல் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வரவும் அந்த குழு முடிவு செய்துள்ளது. இந்த முயற்சிக்காக அந்த கார் நிறுவனம் 42.5 மில்லியன் யென் ($ 385,000) ஒதுக்கியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com