டொயோட்டா யாரிஸின் புதிய காம்பாக்ட் எஸ்யூவி... ஹைப்ரிட் ஆப்ஷனுடன் அறிமுகம்..!

டொயோட்டா யாரிஸின் புதிய காம்பாக்ட் எஸ்யூவி... ஹைப்ரிட் ஆப்ஷனுடன் அறிமுகம்..!

டொயோட்டா யாரிஸின் புதிய காம்பாக்ட் எஸ்யூவி... ஹைப்ரிட் ஆப்ஷனுடன் அறிமுகம்..!

டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம் புதிய யாரிஸ் கிராஸ் காம்பாக்ட் எஸ்.யூ .வியை ஜப்பானில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

டி.என்.ஜி.ஏ இயங்குதளத்தை கொண்ட டொயோட்டாவின் முதல் காம்பாக்ட் வாகனம் இது.

மேலும் மின்சார நான்கு சக்கர டிரைவ் அமைப்போடு வெளிவந்துள்ள டொயோட்டாவின் முதல் வாகனம் இது.

கவர்ச்சிகரமான தோற்றத்தில் முப்பரிமாண அமைப்பில் புதிய யாரிஸின் முன்பக்கம்  அமைந்துள்ளது. 

யாரிஸ் கிராஸ் எஸ்.யூ .வியின் கேபின் அதிநவீன மற்றும் வசதியான உணர்வை அதன் பயனர்களுக்கு கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எல்சிடி மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே இதில் இடம்பெற்றுள்ளது. 

ஸ்மார்ட்போனையும் இணைத்து பய்னபடுத்தும் வகையில் ஸ்மார்ட் டிவைஸ் லிங்க் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய யாரிஸ் கிராஸின் விலை சுமார் 12.50 லட்சம் ரூபாயிலிருந்து ஆரம்பமாகிறது. டாப் எண்ட் ஹைப்ரிட் எலக்ட்ரிக் மாடலின் விலை தோராயமாக 19.60 லட்ச ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com