’ஒப்போ முதல் ஒன்பிளஸ் வரை’ - இந்த மாதம் சந்தையில் அறிமுகமாகவுள்ள ஸ்மார்ட்போன்கள்
நடப்பு மாதமான ஜூனில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகவுள்ள டாப் பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம். ஒப்போ, ஒன்பிளஸ், ரியல்மி, ஹூவாய், iQOO Z3 5G என பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகள் வரிசையாக அறிமுகமாக வரிந்து கட்டிக்கொண்டு வந்து வரிசையில் நிற்கின்றன.
ஒன்பிளஸ் நார்த் CE 5G
வரும் 10ஆம் தேதி அறிமுகமாக உள்ளது ஒன்பிளஸ் நார்த் CE 5G போன். இதன் விலை 20,0000 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குவால்காம் ஸ்நேப்டிரேகன் 750G SoC, ரியர் சைடில் 64MP கேமிரா, பிராண்ட் சைடில் 16MP கேமிரா மாதிரியானவை இடம் பெற்றுள்ளது. 6.43 இன்ச் AMOLED டிஸ்பிளே இந்த போனில் உள்ளது.
ரியல்மி GT 5G
கடந்த மார்ச் மாதம் சீனாவில் அறிமுகமான ஸ்மார்ட்போன் தான் ரியல்மி GT 5G. இந்த போன் எந்த தேதியில் அறிமுகமாகிறது என்பது இதுவரை உறுதியாகவில்லை. குவால்காம் ஸ்நேப்டிரேகன் 888 5G SoC இடம் பெற்றுள்ளது. 12ஜிபி RAM மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்ட் 11, 4500 mAh பேட்டரி முதலியவை இடம்பெற்றுள்ளது.
iQOO Z3 5G
இந்த மாதத்தின் முதற்பாதியில் iQOO Z3 5G போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்நேப்டிரேகன் 768G SoC, 4400 mAh பேட்டரி, ஆண்ட்ராய்ட் 11, 8ஜிபி RAM மாதிரியானவை இந்த போனில் இடம் பெற்றுள்ளது.
ஒப்போ ரெனோ 6 சீரிஸ்
இந்த மாதத்தின் இறுதியில் ஒப்போ ரெனோ 6 சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என தெரிகிறது. ரெனோ 6, ரெனோ 6 புரோ மற்றும் ரெனோ 6 புரோ + மாதிரியான மாடல்கள் இந்த சீரிஸ் வரிசையில் அறிமுகமாக உள்ளது. இதில் ரெனோ 6 புரோ + குவால்காம் ஸ்நேப்டிரேகன் 870 சிப்செட்டில் வெளியாகும் என தெரிகிறது.
ஹூவாய் P50 சீரிஸ்
சர்வதேச அளவில் ஹூவாய் நிறுவனம் P50 மற்றும் P50 புரோ + என இரண்டு மாடல்களை வெளியிட உள்ளது. இது தவிர மேலும் சில மாடல்கள் தங்களது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என தெரிகிறது.

