பிளிப்கார்ட் நிறுவனம் ஆப்பிள், கூகுள், மோட்டோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் விலையில் அதிரடி தள்ளுபடியை வழங்கியுள்ளது.
இணையதள விற்பனை சந்தையான பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, அவ்வப்போது சிறப்பு சலுகைகளை அளித்து வருகிறது. இந்நிலையில், ஜிஎஸ்டி அறிவிப்பிற்கு பின், சில இணையதள விற்பனை சந்தைகள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களில் தள்ளுபடி சலுகைகளை வழங்குகின்றன.
அந்தவகையில், பிளிப்கார்ட், ஓன் யுவர் டிரீம் போன் (Own Your Dream Phone) எனும் விற்பனையை அறிவித்துள்ளது. இதில் ஐபோன் 5s, ஐபோன் 6s, ஐபோன் 6s பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 7 பிளஸ், கூகுள் பிக்சல், கூகுள் பிக்சல் XL, மோட்டோ இசட் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை சலுகை விலையில் விற்கிறது. இந்த சலுகை ஜுன் 22 முதல் 24 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 128 ஜிபி கொண்ட ஐபோன் 7 பிளஸ், 25 சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஐபோன் 7 32 ஜிபியின் விலை 60,000 ரூபாய். இதில் சுமார் 10,000 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது. மேலும், கூகுள் பிக்சல்களுக்கு 3,999 ரூபாய் வரை தள்ளுபடியும். ஒரு சில மாடல்களுக்கு 2000 ரூபாய் வரை எக்ஸ்சேன்ஜ் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.