இந்தியாவில் மார்ச் மாதம் வெளியாகவுள்ள முன்னணி ஸ்மார்ட்போன்களின் அறிமுகம்!

இந்தியாவில் மார்ச் மாதம் வெளியாகவுள்ள முன்னணி ஸ்மார்ட்போன்களின் அறிமுகம்!

இந்தியாவில் மார்ச் மாதம் வெளியாகவுள்ள முன்னணி ஸ்மார்ட்போன்களின் அறிமுகம்!
Published on

இன்றைய டெக்னாலஜி உலகில் நிற்பது, நடப்பது, தூங்குவது என எல்லா நேரமும் ஸ்மார்ட்போனை அணைத்த படி இருப்பவர்கள்தான் அதிகம். அந்தளவிற்கு ஸ்மார்ட்போன்கள் உலகை ஆட்சி செய்து வருகின்றன. அதிலும் இந்தியா மாதிரியான மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளில் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றன முன்னணி நிறுவனங்கள். அந்த வகையில் இந்த மார்ச் மாதம் அறிமுகமாகவுள்ள முன்னணி ஸ்மார்ட்போன்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம். 

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் பிளாக்ஷிப் தயாரிப்பாக 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை களம் இறக்க உள்ளது. ஜியோமி நிறுவனம் ரெட்மி நோட் 10 சீரிஸ் போனை மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அறிமுகம் செய்கிறது. 5000 மெகா ஹெட்ஸ் பேட்டரி திறன் கொண்ட மோட்டோ G10 மாடல் போனும் மார்ச் முதல் வாரத்தில் வெளியாக உள்ளதாம். அதோடு சேர்த்து G30 போனையும் மோட்டோ வெளியிட உள்ளதாம்.  

சாம்சங் நிறுவனம் கேலக்சி A52 போனை மார்ச் மாதத்தின் பிற்பாதியில் இந்திய சந்தைக்கு கொண்டு வரவுள்ளது. அசுஸ் நிறுவனத்தின் ரோக் போன் 5, ரியல்மி GT 5ஜி ஸ்மார்ட்போன், 108 மெகா பிக்சல் கொண்ட 8 சீரிஸ் போனையும் ரியல்மி களம் இறக்குகிறது.

iQOO 7 போனும், ஒப்போவின் F19 புரோ சீரிஸும் மார்ச்சில் வெளியாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com