சிறந்த பேட்டரி பேக்-அப்புடன் இந்தியாவில் வெளிவந்துள்ள டாப் 5 ஸ்மார்ட்போன்கள்!

சிறந்த பேட்டரி பேக்-அப்புடன் இந்தியாவில் வெளிவந்துள்ள டாப் 5 ஸ்மார்ட்போன்கள்!
சிறந்த பேட்டரி பேக்-அப்புடன் இந்தியாவில் வெளிவந்துள்ள டாப் 5 ஸ்மார்ட்போன்கள்!

ஸ்மார்ட்போன்கள் இன்றைய டிஜிட்டல் வாழ்வில் தவிர்க்க முடியாத பயன்பாட்டு சாதனமாக உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இந்த செப்டம்பர் மாதம் சிறந்த பேட்டரி பேக்-அப்புடன் வெளிவந்துள்ள டாப் 5 ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம். 

ரியல்மி 8 5ஜி

5000 mAh பேட்டரி திறனுடன் வெளிவந்துள்ளது ஸ்மார்ட்போன் ரியல்மி 8 5ஜி. 6.5 இன்ச் ஃபுள் HD டிஸ்பிளே, மீடியாடெக் 700 SoC, 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 18 வாட்ஸ் Quick சார்ஜ் மாதிரியானவை இந்த போனின் சிறப்பம்சங்கள். 

ரெட்மி நோட் 10T 5ஜி

6.5 இன்ச் ஃபுள் HD டிஸ்பிளே, மீடியாடெக் டைமென்சிட்டி 700 SoC மற்றும் 48 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது இந்த போன். 5000 mAh பேட்டரி கொண்டுள்ள இந்த போன் உத்தேசமாக 14000 ரூபாய் விலை கொண்டது. 

மோட்டோ ஜி60 

6.8 ஃபுள் HD டிஸ்பிளே, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732G SoC, 108 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மாதிரியானவை இந்த போனில் உள்ளது. 6000 mAh பேட்டரி உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. 

போக்கோ M3 புரோ 5ஜி 

போகோ M3 புரோ 5ஜி போன் 6.53 இன்ச் ஃபுள் HD டிஸ்பிளே, 6 ஜிபி ரேம் மற்றும் 48 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமராவுடன் இந்த போன் வெளிவந்துளது. டைமென்சிட்டி 700 SoC இந்த போனில் உள்ளது. 5000mAh பேட்டரி திறனை கொண்டுள்ளது இந்த போன். 

சாம்சங் கேலக்ஸி M32 5ஜி 

சாம்சங் கேலக்ஸி  M32 5ஜி போன் 6.5 இன்ச் HD டிஸ்பிளே, 8ஜிபி ரேம், ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 720 SoC,  ரியர் சைடில் நான்கு கேமரா, அதில் 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, மேலும் 15W சார்ஜிங், 5000mAh பேட்டரி உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com