மியூசிக் ஆப் 'ரெஸ்சோ': டிக் டாக் நிறுவனத்தின் மற்றுமொரு செயலி! 

மியூசிக் ஆப் 'ரெஸ்சோ': டிக் டாக் நிறுவனத்தின் மற்றுமொரு செயலி! 
மியூசிக் ஆப் 'ரெஸ்சோ': டிக் டாக் நிறுவனத்தின் மற்றுமொரு செயலி! 

டிக் டாக்கை உருவாக்கிய பைட்டான்ஸ் நிறுவனம் இந்தியாவில் மற்றொரு செயலியை அறிமுகம் செய்துள்ளது

செல்போன் பயனாளர்களிடம் அதிகம் கவர்ந்த செயலியாக ‘டிக்டாக்’ இருந்து வருகிறது. இந்தச் செயலியில் இளைஞர்கள் மகிழ்ச்சியாக பாட்டு பாடி, நடனம் ஆடி தங்களின் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். சீனாவில் டிக் டாக் நிறுவனம் குறுகிய காலத்தில் நல்ல வரவேற்பை பெற்ற செயலியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக இந்தியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வயது வித்தியாசம் இன்றி பலரும் டிக் டாக் பயன்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் டிக் டாக்கை உருவாக்கிய பைட்டான்ஸ் நிறுவனம் இந்தியாவில் மற்றொரு செயலியை அறிமுகம் செய்துள்ளது. ரெஸ்சோ என்ற பெயரில் இசை பிரியர்களுக்காக இந்த செயலி அறிமுகமாகியுள்ளது. தற்போது இந்தியாவில் 27ஆயிரத்திற்கும் அதிகமானோர் ரெஸ்சோவை தரவிறக்கம் செய்துள்ளனர். பீட்டா வெர்ஷனாக உள்ள ரெஸ்சோ, பல வகையான பாடல்களை சேகரித்து வைத்திருக்கும் செயலியாக உள்ளது. 

பயனாளர்கள் பாடல்களுக்கு கீழே கமெண்ட் செய்யும் வசதி, டிக் டாக் மாதிரி குறைந்த நொடி வீடியோக்கள், ஜிஃப் வசதிகள் உள்ளிட்டவை ரெஸ்சோ செயலியில் உள்ளன. இந்தியாவில் சோதனை முறையில் உள்ள ரெஸ்சோ இந்தோனேஷியாவிலும் அறிமுகமாகவுள்ளது. இணையப்பயன்பாட்டில் இந்தியா, இந்தோனேஷியா நாட்டு மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதால் இந்த இரு நாடுகளையும் தேர்ந்தெடுத்துள்ளதாக பைட்டான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com