விதியை மீறி பயனாளர்களின் MAC முகவரிகளை சேகரித்த டிக் டாக்?!!
டிக் டாக் உள்ளிட்ட 350 செயலிகள் பயனாளர்களின் சாதனங்கள் சார்ந்த தனிப்பட்ட தகவல்களை சேகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
டிக் டாக் மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில் இந்திய-சீன எல்லைப் பிரச்னைக்கு பிறகு டிக் டாக் உள்ளிட்ட பல செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்ப்பட்டன. டிக் டாக்கை அமெரிக்காவிலும் தடை செய்ய அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் டிக் டாக் மீது மீண்டும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Wall Street Journal investigation வெளியிட்ட தகவலின்படி டிக் டாக் உள்ளிட்ட 50 செயலிகள் பயனாளர்களின் சாதனங்கள் சார்ந்த தனிப்பட்ட தகவல்களான MAC முகவரிகளை சேகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது விதிக்கு எதிரானது என்றும், பயனாளர்களுக்கு விளம்பரங்களை காண்பிக்க தகவல்கள் சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு விதிக்கப்பட்ட, iOS மற்றும் ஆண்ட்ராய்டு விதிப்படி பயனாளர்களின் MAC முகவரிகளை செயலிகள் சேகரிக்கக் கூடாது. ஆனால் டிக் டாக் உள்ளிட்ட 350 செயலிகள் விதிகளை மீறி கிட்டத்தட்ட 18 மாதங்கள் தகவல்களை சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விதிகள் இருந்தாலும், குறுக்கு வழியில் இந்த வேலையை அந்த செயலிகள் செய்துள்ளதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா கொடுத்த அழுத்தம் காரணமாக இந்த தகவல் சேகரிப்பை, கடந்த நவம்பர் மாதம் டிக் டாக் நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.