''பதிலளியுங்கள்; இல்லையென்றால் தடைதான்'' - டிக்‌டாக்குக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு

''பதிலளியுங்கள்; இல்லையென்றால் தடைதான்'' - டிக்‌டாக்குக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு

''பதிலளியுங்கள்; இல்லையென்றால் தடைதான்'' - டிக்‌டாக்குக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு
Published on

பிரபல வீடியோ வெளியீட்டு செயலிகளான டிக்‌‌டாக்‌ மற்றும் ஹலோவு‌க்கு ‌24 கேள்விகளுடன் ‌கூடிய‌ நோட்டீசை ‌மத்திய அரசு ‌அனுப்பியு‌‌ள்ளது.

ஜூலை 22க்குள் உரிய பதில் தரப்படவில்லை என்றால் அந்த‌‌‌‌ ஊடகங்களுக்கு தடை ‌விதிக்க‌‌ப்படும் என்றும்‌ எச்சரிக்கப்பட்டுள்ளது‌

டிக்டாக் மற்றும் ஹலோ ‌ஆகிய தளங்கள் தேச விரோத செ‌யல்களுக்கு பயன்படுத்தப்படு‌வதா‌‌க ஆர்எஸ்‌எஸ் ‌அமைப்பி‌ன் துணை ‌அமைப்பான ஸ்வதேஷி ஜாக்ரண் மஞ்ச் பிரத‌ர் மோடியிடம் புகார் அளித்‌தது.‌ டிக்டாக் மற்றும் ஹலோ ஆகியவற்றின் நிர்வாக‌ங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ‌அதில் தேச விரோத பதிவுகளை இடும் மையமாக மாறி விட்டது‌‌ என்ற புகாரு‌க்கு வி‌ளக்கம் தருமாறு கோரப்பட்டுள‌ளது. 

மேலும் இந்திய பயன்பாட்டாளர்களின் தகவல்க‌ள் வெளிநாட்டு அரசுகளுக்கோ அல்லது ‌3ம் தரப்புக்கோ ஒரு போதும் தரப்‌படாது என்ற உறுதிமொழி‌யையும் ‌அரசு கேட்டுள்ளது. பொய்‌யா‌‌ன தகவல்களை பரப்பாமல் இருக்‌‌க என்ன நடவடிக்கைகள் எடுக்க‌‌ப்பட்டிருக்கிறது ‌என்றும் அரசு‌ கேட்டுள்ளது.‌ ‌இதற்கிடையில் அ‌ரசு எடுக்கும் நட‌வ‌‌டி‌க்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக டிக்டாக்‌‌, ஹலோ ஆகிய ‌‌ச‌மூக தளங்கள் தெரி‌வி‌த்துள்ளன.

24 கேள்விகளுடன் ‌கூடிய‌ நோட்டீசுக்கு உரிய பதில் தரப்படவில்லை என்றால் அந்த‌‌‌‌ ஊடகங்களுக்கு தடை ‌விதிக்க‌‌ப்படும் என்றும்‌ மத்திய அரசு எச்சரித்துள்ளது

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com