மாதவிடாய் எமோஜி உட்பட 230 புதிய எமோஜிகளுக்கு ஒப்புதல் !

மாதவிடாய் எமோஜி உட்பட 230 புதிய எமோஜிகளுக்கு ஒப்புதல் !

மாதவிடாய் எமோஜி உட்பட 230 புதிய எமோஜிகளுக்கு ஒப்புதல் !
Published on

மாதவிடாயை குறிக்கும் எமோஜி உட்பட  230 புதிய எமோஜிகளுக்கு "யுனிகோட் கான்சோர்டியம்" ஒப்புதல் அளித்துள்ளது.

நம் எண்ணங்களை வெளிப்படுத்த குறுந்தகவல்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு நம் உணர்வுகளை வெளிப்படுத்த எமோஜிகள் முக்கியம். வார்த்தைகள் கடத்த முடியாத பல விஷயங்களைக் கூட ஒரு எமோஜி கடத்திவிடுகிறது. சமூக வலைதளங்களில் எமோஜிகளின் பங்கு அதிகம். குறிப்பாக தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் அப்பில் எமோஜிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. 

இப்படியான எமோஜிகளை மக்கள் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்றால் "யுனிகோட் கான்சோர்டியம்" என்ற நிறுவனத்தின் ஒப்புதல் தேவை. "எமோஜி 12" என்னும் பெயரில் புதிதாக 230 எமோஜிகளுக்கு "யுனிகோட் கான்சோர்டியம்" ஒப்புதல் அளித்துள்ளது.

சேலை கட்டிய பெண், வெங்காயம், சொட்டும் ரத்தம் உள்ளிட்ட பல புதிய எமோஜிகள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. குறிப்பாக இந்த முறை மாற்றுத்திறனாளிகளுக்கான எமோஜிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சக்கர நாற்காலி, சக்கர நாற்காலி பயன்படுத்துவோர், காது கேட்காதவர்கள், கண் பார்வை இல்லாதவர்கள், செயற்கை கை, கால் பொருத்தியவர்கள் என புதிய எமொஜிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக மாதவிடாய்க்கான எமோஜி பலரத்து மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது. சொட்டும் ரத்தம் போல் உருவாக்கப்பட்டுள்ள சொட்டும் ரத்தம் எமோஜி ரத்தத்தானம் மற்றும் மாதவிடாயையும் குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இது மாதவிடாய் குறித்தான தயக்கத்தை உடைக்க உதவும் எனவும் யுனிகோட் கான்சோர்டியம் தெரிவித்துள்ளது.

மாதவிடாயை குறிக்கும் எமோஜிக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பெண்கள் பலர் இது இன்னும் தெளிவான எமோஜியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றும், சொட்டு ரத்தம் என்பது மாதவிடாய்க்கானது என்பதை எல்லாராலும் புரிந்துகொள்ள முடியாமல் போக வாய்ப்புள்ளதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அதற்கு பதிலாக சில குறிப்பிட்ட எமோஜிகளை பரிந்துரையும் செய்துள்ளனர்.

(பெண்கள் பரிந்துரை செய்த சில எமோஜிகள் )

இந்த புதிய எமோஜிகள் இந்த ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com