பைக்கை மடித்து பையில் வைத்துக் கொள்ளலாம்

பைக்கை மடித்து பையில் வைத்துக் கொள்ளலாம்

பைக்கை மடித்து பையில் வைத்துக் கொள்ளலாம்
Published on

கைப்பையில் மடித்து வைத்துக்கொள்ளும் வகையிலான புதிய எலெக்ட்ரிக் பைக்குகளை சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று வடிவமைத்துள்ளது.

டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சாரத்தில் இயங்கும் வாகனத் தயாரிப்பில் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்தவகையில் மிகவும் காம்பேக்டான எலெக்ட்ரிக் பைக்கினை ஷென்ஷென் எனும் சீன நிறுவனம் தயாரித்துள்ளது. ஸ்மாசர்க்கிள் எஸ் 1 (Smacircle S1) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எலெக்ட்ரிக் பைக் சுமார் 7 கிலோ எடை கொண்டது. மணிக்கு 20 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் பெற்றது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் பைக்கை 5 எளிய முறைகளைப் பயன்படுத்தி மடித்து நமது கைப்பைக்குள் வைத்துக்கொள்ளலாம் என்கிறது தயாரிப்பு நிறுவனம். 36 வோல்ட் பேட்டரியில் இயங்கும் இந்த எலெக்ட்ரிக் பைக், இரண்டரை மணி நேரத்தில் முழுவதும் சார்ஜ் ஆகிவிடுமாம். ஸ்மார்ட் போன் மூலம் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஸ்மாசர்க்கிள் எஸ் 1 எலெக்ட்ரிக் பைக், 100 கிலோ எடை வரை தாங்குமாம்.   
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com