யூ டியூபில் வீடியோவுக்குள் வீடியோ பார்க்கும் வசதி

யூ டியூபில் வீடியோவுக்குள் வீடியோ பார்க்கும் வசதி

யூ டியூபில் வீடியோவுக்குள் வீடியோ பார்க்கும் வசதி
Published on

காட்சிக்குள் மற்றொரு காட்சியைக் காணும் வசதியை சமூக வீடியோ வலைத்தளமான யூடியூப் வழங்கவுள்ளது.

முதல்கட்டமாக ஆப்பிள் ஐஃபோன் இயங்குதளமான ஐஓஎஸ்-சில் மட்டும் இந்த வசதி அளிக்கப்பட உள்ளது. அதிலும், அமெரிக்காவில் ஐஓஎஸ்-14 இயங்குதளத்துக்கு மேல் கொண்ட ஆப்பிள் ஐஃபோன் மாடல்களில் யூடியூப் பார்ப்பவர்களுக்கு வீடியோவுக்குள் வீடியோ வசதி இப்போதைக்கு வழங்கப்படவுள்ளதாக ஆப்பிள் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

எனினும், இந்த வசதி மற்ற நாடுகள் மற்றும் ஆன்ட்ராய்டு பயனாளர்களுக்கு எப்போது அறிமுகமாகும் என குறிப்பிட்ட நாள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com