இலங்கை: 'உணவு, மெத்தைகள் ரெடி’- வீதியில் தொடர்கிறது மக்கள் போராட்டம்

இலங்கை: 'உணவு, மெத்தைகள் ரெடி’- வீதியில் தொடர்கிறது மக்கள் போராட்டம்

இலங்கை: 'உணவு, மெத்தைகள் ரெடி’- வீதியில் தொடர்கிறது மக்கள் போராட்டம்
Published on

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி கொட்டும் மழையிலும் போராட்டம் நீடித்து வருகிறது.

இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்‌சவுக்கு எதிராக 5ஆவது நாளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொழும்பில் காலிமுகத்திடலில், கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் பெண்கள், இளைஞர்கள், வயதானவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட இருக்கும் நிலையில், கோ ஹோம் கோட்டா என பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.

போராட்டக்காரர்கள் தங்குவதற்கு ஏதுவாக, தற்காலிக கூடாரங்கள், உணவு, மெத்தைகள் மற்றும் நகரும் கழிப்பறைகள் அமைத்துள்ளனர். தாங்கள் தங்கியுள்ள போராட்டக் களத்திற்கு "கோட்டா கோ கம" என்று பெயரும் சூட்டியுள்ளனர். மேலும், ராஜபக்சக்களின் உருவம் பொருத்திய பானைகளை உடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துவதை நிறுத்தி வைத்தது இலங்கை!

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com