மீண்டும் ஒரு வெற்றி.. சாதித்துக் கொண்டிருக்கும் Chandrayaan-3!

சந்திரயான்-3 விண்கலத்தின் இறுதி வேகக்குறைப்பு செயல்பாடு வெற்றியடைந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இஸ்ரோ தனது ட்விட்டர் சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நள்ளிரவு 1.50 மணிக்கு சந்திரயான் 3-ன் இரண்டாவது மற்றும் இறுதி வேகக் குறைப்பு நடவடிக்கையானது வெற்றிகரமாக நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவின் மேற்பரப்புக்கு நெருக்கமாக தற்போது குறைந்தபட்சம் 25 கிலோ மீட்டர் தொலைவும், அதிகபட்சம் 134 கிலோ மீட்டர் தொலைவும் கொண்ட சுற்றுவட்டப் பாதையில் விண்கலம் பயணித்து வருவதாக இஸ்ரோ கூறியுள்ளது.

இதன்பிறகு லேண்டர் தரையிறங்கும் தளத்தின் செயல்பாடு, இன்று மாலை 5.45 மணியளவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. நிலவின் புவிவட்ட பாதையில் உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டரை பிரிக்கும் முக்கியமான பணி, கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது.

Chandrayaan-3
Chandrayaan 3 | உயரம் குறைக்கப்பட்ட லேண்டர்; அடுத்தடுத்த கட்டங்களை எதிர்நோக்கி காத்திருக்கும் இஸ்ரோ!

இதையடுத்து நிலவின் முதல் படங்களை எடுத்து அனுப்பியது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை எல்விம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம், கடந்த ஜூலை 14 ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com