விரைவில் வருகிறது நோக்கியா 5.3 போன்... என்னென்ன சிறப்பம்சங்கள்?
நோக்கியா போன்களை விற்பனை செய்யும் HMD குளோபல் நிறுவனம் விரைவில் நோக்கியா 5.3 மாடல் ஸ்மார்ட் போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் வெர்ச்சுவல் பிரஸ் மீட்டுக்கான அழைப்புகளை பத்திரிகை நிறுவனங்களுக்கு அந்நிறுவனம் அனுப்பியுள்ளது.
6.55 இன்ச் மற்றும் எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ள நோக்கியா 5.3 போனில் 3 ஜிபி, 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேமுடன் 64 ஜிபி இன்டர்னல் மெமரி அடங்கியுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 மூலம் இயங்கும் இந்த போனில் ஆண்ட்டிராய்ட் 10 இடம்பெற்றுள்ளது. 512 ஜிபி வரை எக்ஸ்டெர்னல் மெமரியை இதில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
புகைப்படம் எடுப்பதற்கு, நோக்கியா 5.3 13 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல் ஆழ சென்சார், 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் கொண்ட குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது செல்ஃபிக்களுக்காக 8 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது.
ரியர் சைடில் நான்கு கேமிராக்கள் இடம்பெற்றுள்ளது. 8 மெகா பிக்ஸல் கொண்டுள்ள முன் பக்க கேமிராவில் செல்பி எடுக்கலாம்.
மூன்று வண்ணங்களில் வெளியாகவுள்ள நோக்கியா 5.3 போனில் 4000 மில்லியாம்ப் திறன் கொண்ட பேட்டரி இடம்பெற்றுள்ளது. இதன் விலை 16,800 ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாத இறுதிக்குள் நோக்கியா 5.3 ஸ்மார்ட் போனுடன் மேலும் சில போன்களை லான்ச் செய்ய HMD குளோபல் நிறுவனம் திட்டமிட்டு வருகிறதாம்.