படம் வரையும் ரோபோ..!

படம் வரையும் ரோபோ..!

படம் வரையும் ரோபோ..!
Published on

மனிதர்களால் செய்ய முடியாத பல அறிய செயல்களையும் ரோபோக்கள் இன்று அசால்டாக செய்து வருகின்றன. அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளது படம் வரையும் ரோபோ.

லண்டனைச் சேர்ந்த குழு ஒன்று படம் வரையும் புதிய ரக ரோபோ ஒன்றினை வடிவமைத்துள்ளது. லைன் அஸ் (Line-us) என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ கடினமான படங்களை கூட அழகாகவும் மிகக் குறுகிய நேரத்திலும் வரையக்கூடிய திறன் பெற்றுள்ளது.

இந்த ரோபோ உடன் பேனா ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. திரையில் தெரியும் படத்தை உள்வாங்கி கொண்டு, கணினி திரையில் மவுசை பயன்படுத்தி எவ்வாறு படம் வரையபடுகிறதோ அதேபோன்று லைன் அஸ் ரோபோவும் சில அசைவுகளின் படி படங்களை தாளில் தெளிவாக வரைகிறது.

தற்போது நிதி திரட்டும் நடவடிக்கைக்காக கிக்ஸ்டார் இணையதளத்தில் இந்த ரோபோ விற்பனைக்கான விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. சந்தைக்கு வரும் முன்னரே இணையதளத்தில் 30 மணி நேரத்தில் 1000 லைன் அஸ் ரோபோக்கள் விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com