செவ்வாய் கோளில் இருந்து விழுந்த விண்கல்
செவ்வாய் கோளில் இருந்து விழுந்த விண்கல்முகநூல்

செவ்வாய் கோளில் இருந்து விழுந்த விண்கல்... பல கோடி ஏலத்தில் விற்பனை!

செவ்வாய் கோளில் இருந்து விழுந்த விண்கல் சுமார் 46 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
Published on

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற சோத்பி அருங்காட்சியகத்தில் அரிய பொருட்கள் ஏலம் நடைபெற்றது. இதில் 54 பவுண்டு எடையுள்ள விண்கல் கடும் போட்டிக்கு இடையே 46 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது.

விண்கல் ஒன்று இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் போவது இதுவே முதல்முறையாகும். இந்த விண்கல் 2023ஆம் ஆண்டு நைஜர் நாட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகும். 50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் செவ்வாய் கோளை குறுங்கோள் ஒன்று தாக்கியபோது அதிலிருந்து இந்த விண்கல் விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

செவ்வாய் கோளில் இருந்து விழுந்த விண்கல்
காமராஜர் ஏசி பயன்படுத்தினாரா? திருச்சி சிவா பேசியது உண்மைதானா?

இதைத்தொடர்ந்து நடைபெற்ற ஏலத்தில் செரட்டோசாரஸ் வகை டைனோசார் எலும்புக்கூடு ஒன்றும் ஏலம் விடப்பட்டது. இது 260 கோடி ரூபாய்க்கு விலை போனது. இது எதிர்பார்த்ததை விட 3 மடங்கு அதிக தொகை என ஏல நிறுவனம் கூறியுள்ளது இது போன்று செரட்டோசாரஸ் எலும்புக்கூடுகள் உலகத்தில் 4 மட்டுமே உள்ளதாகவும் ஏல நிறுவனம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com