சமூக பாதுகாப்பிற்காக இணையத்தில் சில மாற்றங்கள் வேண்டும் - பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்

சமூக பாதுகாப்பிற்காக இணையத்தில் சில மாற்றங்கள் வேண்டும் - பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்
சமூக பாதுகாப்பிற்காக இணையத்தில் சில மாற்றங்கள் வேண்டும் - பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க்

 சமூக பாதுகாப்பிற்காக இணைய பயன்பாட்டில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டுமென்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் என்றாலே அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது ஃபேஸ்புக். ஃபேஸ்புக் தளம் அதிலிருக்கும் பயனாளர்களின் தகவல்களை பாதுகாக்க முயற்சிகள் எடுத்துகொண்டு வருகிறது. ஆனாலும் அவ்வப்போது அதில் இருக்கும் கணக்குகளின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு திருடப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. சமீப காலமாக இன,மத அடிப்படையிலான பன்மைத்துவ தேசியவாத கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்கள் ஃபேஸ்புக்கில் அதிகம் வலம்வர தொடங்கியள்ளன. அந்தக் கருத்துகளின் தாக்கம் பெரிதும் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் நமது சமூகம் பாதுகாப்பிற்காக இணைய பயன்பாட்டில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டுமென்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர், ''நமது வாழ்க்கையின் முக்கிய பகுதியாக தொழில்நுட்பம் இருக்கிறது. இணைய பாதுகாப்பின்மை, அரசியல் விளம்பரங்கள், அதிநவீன சைபர் தாக்குதல்கள் உள்ளிட்ட பலவற்றை குறித்து நாம் தினம்தினம் முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். நாம் எடுக்கும் முக்கிய முடிவுகள் தான் நம் சமூகத்தை பாதுகாப்பாய் வைத்திருக்கும். ஆனால் இது தனி நிறுவனத்தால் மட்டும் சாத்தியமில்லை.

இணைய கட்டுப்பாட்டாளர்களும், அரசுகளும் இணையத்தில் சில மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் அரசுக்கும், பயனாளர்களுக்கும்  சரியான பங்களிப்பை நாம் கொடுக்க முடியும் என்று நம்புகிறேன். சமூக பாதுகாப்போடு சேர்த்து மக்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

நான் கற்றுக்கொண்ட வரை நான்கு முக்கிய விஷயங்களில் நாம் கவனம் கொள்ள வேண்டும். தீங்கு விளைவிக்கக்கூடிய உள்ளீடுகள், தேர்தல் குறித்த உண்மைத்தன்மை, தனியுரிமை மற்றும் தரவு பெயர்வுத்திறன் ஆகியவற்றில் சில மாற்றங்களை கொண்டு வந்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். 

மேலும் ஒவ்வொரு தலைப்பின் கீழும் எந்தெந்த மாற்றங்களை கொண்டு வர வேண்டுமென்ற முழு விளக்கத்தையும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் மார்க் ஜூகர்பெர்க் விளக்கியுள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com