48 எம்பி கேமராவுடன் வெளியான ‘ஹானர் 30ஐ’ - விலை, சிறப்பம்சங்கள் ?

48 எம்பி கேமராவுடன் வெளியான ‘ஹானர் 30ஐ’ - விலை, சிறப்பம்சங்கள் ?

48 எம்பி கேமராவுடன் வெளியான ‘ஹானர் 30ஐ’ - விலை, சிறப்பம்சங்கள் ?
Published on

ஹானர் நிறுவனத்தின் புதுவராவாக 'ஹானர் 30i' ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. 

ரஷ்யாவில் அறிமுகமாகியுள்ள இந்த போனின் பின்புறத்தில் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மெயின் கேமராவில் 48 மெகா பிக்ஸலில் புகைப்படம் எடுக்கலாம். அத்துடன் 16 எம்பி செல்ஃபி கேமரா உள்ளது. 6.3 இன்ச் கொண்டுள்ள இந்த போனின் டிஸ்ப்ளே முழுவதும் ஹெச்டி வாட்டர் டிராப் நாட்ச் ஸ்டைலில் தயாரிக்க்கப்பட்டுள்ளது.  

நீண்ட நேரம் சார்ஜ் நிற்க கூடிய வகையில் 4000 எம்ஏஹெச் (மில்லியாம்ப் ஹவர்) திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 

ஆண்ட்ராய்ட் 10ல் இயங்கும் இந்த போனில், 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்நல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நானோ ட்யூயல் சிம் கார்டுகளை இதில் பயன்படுத்தலாம். 171.5 கிராம்  எடையுள்ள இந்த போன் மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. 

கடந்த ஜூலையில் அறிமுகமான ஹானர் 30 லைட் போனில் மேலும் கூடுதலாக சிறப்பம்சங்களை சேர்த்து ஹானர் 30i என வெளியிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இந்த போனின் விலை ரூ.17,600 என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com