இஸ்ரோ இன்று அனுப்பிய PSLV-C58 ராக்கெட்டில் இவ்வளவு சிறப்பம்சங்கள் இருக்கா! வியக்க வைக்கும் தகவல்கள்!

இஸ்ரோவின் மிக நம்பிக்கை மிக்க ராக்கெட்டான பிஎஸ்எல்வியின் 60வது ராக்கெட்டின் சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
PSLV-C58
PSLV-C58 puthiya thalaimurai

செய்தியாளர் ந.பால வெற்றி வேல்

இஸ்ரோவின் மிக நம்பிக்கை மிக்க ராக்கெட்டான பிஎஸ்எல்வியின் 60வது ராக்கெட்டின் சிறப்பம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

செயற்கைக்கோள்கள், விண்கலன்களை விண்ணில் அனுப்ப எஸ்.எஸ்.எல்.வி, பி. எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட்களை இஸ்ரோ பயன்படுத்துகிறது. வெவ்வேறு நிறை கொண்ட செயற்கை கோள்களுக்கு ஏற்பவும், பூமியிலிருந்து அனுப்பப்பட உள்ள உயரங்களின் அடிப்படையிலும் இந்த மூன்று வகையான ராக்கெட்டுகளும் தேவைக்கு ஏற்றார் போல இஸ்ரோ வடிவமைக்கிறது.

அப்படி வடிவமைக்கப்பட்ட ராக்கெட்டுகளில் பிஎஸ்எல்வி ராக்கெட் மிகவும் வெற்றிகரமான ராக்கெட் ஆகும். இதுவரை அனுப்பப்பட்ட 59 பி எஸ் எல் வி ராக்கெட்டுகளில் 56 ராக்கெட் வெற்றிகரமாக தனது பணியை முடித்துள்ளது.

இந்நிலையில் 60-வது பிஎஸ்எல்வி ராக்கெட் தான் இந்தியாவின் முதல் விரிவான வானியல் ஆராய்ச்சி செயற்கைக்கோளான XPOSAT-ஐ விண்ணில் அனுப்பியுள்ளது. PSLV C 58 ராக்கெட் இந்தியாவின் முதல் அறிவியல் செயற்கைக்கோளான எக்ஸ்போசேட்டை கிழக்கு சுற்றுவட்ட பாதையில் 650 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்தியுள்ளது.

மேலும் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் உள்ள PS4 பாகம் ஒரு செயற்கைக்கோளை நிறுத்தப்பட்ட பின்னர் மேலிருந்து கீழ்நோக்கி இறங்கி 350 கிலோமீட்டர் சுற்றுவட்ட பாதையில் POEM 3 செயற்கைக்கோளை நிலை நிறுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

PSLV-C58
’PSLV-C58' : வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ’XPOSAT’ செயற்கைகோள் ! 2024-ன் ஆரம்பமே அதிரடி!

பத்து துணை செயற்கைக்கோள்களும் ஆய்வு முயற்சியில் பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோவின் 60 ஆவது பிஎஸ்எல்வி ராக்கெட், PSLV DL வகையை சேர்ந்த 4வது ராக்கெட் ஆகும். விண்ணூர்தியின் உயரம் - 44.4 மீட்டர், உந்து விசைக்கான நிறை - 260 டன். அதன் முதல் அடுக்கு 32 மீட்டர் உயரமுள்ளது, திட எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. 2வது அடுக்கின் உயரம் 12.8 மீட்டர், UH25 +டைனிட்ரோஜன் டெட்ராக்சைடு என்ற திரவ எரிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

3வது அடுக்கு, 3.6 மீட்டர் உயரமுள்ளது. திட எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. 4வது அடுக்கு, 2.5 மீட்டர் உயரமுள்ளது. திட எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. 50 கிலோமீட்டர் உயரமுள்ள XPOSAT - 6, 350 கிலோமீட்டர் உயரம் POEM 3 ஆகிய இரண்டு செயற்கைக் கோள்கள் பயன்படுத்தப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 9:10 மணிக்கு ராக்கெட் விண்ணில் அனுப்பப்பட்ட நிலையில் அதன் நான்கு பாகங்களும் தனியாக பிரிந்து 650 km உயரத்தில் எக்ஸ்போர்ட் சேட் செயற்கைக்கோளை சுற்றுவட்ட பாதையில் 22 நிமிடங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com