விண்வெளி சுற்றுலா
விண்வெளி சுற்றுலாpt

SpaceX| வரலாற்றில் முதல் முறை.. விண்வெளி சுற்றுலா சென்ற முதல் குழு வெற்றிகரமாக பூமி திரும்பியது!

எலான் மஸ்க்கின் தனியார் விண்கலம் மூலம் விண்வெளி சுற்றுலாவிற்கு சென்ற முதல் குழு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியுள்ளது.
Published on

அமெரிக்காவை சேர்ந்த தனியார் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தின் மூலம் 5 நாட்கள் விண்வெளி சுற்றுலா சென்ற 4 பேர் சுற்றுலா முடிந்து வெற்றிகரமாக திரும்பியுள்ளனர்.

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனியார் விண்வெளி பயணத்தை கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி தொடங்கியது. பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட போலரிஸ் டான் என்ற ஸ்பேஸ் விமானம் மூலம் ஃபால்கன் 9 என்ற ராக்கெட்டில் “ஐசக்மேன், ஸ்கார் போடீட், ஷாரா கில்லீஸ், அன்னா மேனன்” ஆகிய 4 பேர் விண்வெளிக்குச் சென்றனர்.

விண்வெளியில் நடை மேற்கொண்ட முதல் நபர்..

வெற்றிகரமாக விண்வெளிக்கு சென்றபின் செப்டம்பர் 12-ம் தேதி மாலை 4.22 மணிக்கு கேப்ஸ்யூலில் இருந்து வெளியேறிய ஜாரெட் ஐசக்மேன் என்பவர், முதல் நபராக விண்நடை மேற்கொண்டார். அதன்மூலம் ஸ்பேஸ் வாக் சென்ற முதல் மனிதர் என்ற பெருமையை அமெரிக்காவை சேர்ந்த ஐசக்மேன் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் 5 நாட்களாக நீடித்த விண்வெளி சுற்றுலா பயணம் முடிந்து 4 பேரும் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர். வரலாற்றில் முதன்முறையாக விண்வெளி வீரர்கள் அல்லாதவர்கள் விண்ணுக்கு சென்று விண்நடை மேற்கொண்டது பெரிய விசயமாக பார்கப்படுகிறது. யார் வேண்டுமானாலும் விண்வெளிக்கு செல்லலாம் என்பதை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நிரூபித்துக் காட்டியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com