மொபைல் ஃபோனில் ஜிபிஎஸ் வசதி அவசியம்

மொபைல் ஃபோனில் ஜிபிஎஸ் வசதி அவசியம்

மொபைல் ஃபோனில் ஜிபிஎஸ் வசதி அவசியம்
Published on

ஜனவரி 1ம் தேதி முதல் விற்பனையாகும் மொபைல் ‌ஃபோன்கள் அனைத்திலும் ஜிபிஎஸ் வசதி இருக்க வேண்டும் என்பதை மத்திய அரசு மீண்டும் அறிவுறுத்தியுள்ளது. 

ஜிபிஎஸ் வசதி சேர்க்க வேண்டுமென்றால் மொபைல் ஃபோன்கள் விலை அதிகரிக்கும் என்றும் எனவே அதற்கு பதில் மாற்றுத் தொழில்நுட்பத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றும் உற்பத்தி நிறுவனங்கள் அரசை கேட்டுக்கொண்டிருந்தன. ஆனால் இதை நிராகரித்த மத்திய தொலைத் தொடர்புத் துறை, ஜிபிஎஸ் வசதி அவசியம் இடம் பெற வேண்டும் என திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது. நுகர்வோர் குறிப்பாக பெண்கள் நலன் கருதி இத்திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும் அரசு கூறியுள்ளது. ஜிபிஎஸ் வசதியுள்ள மொபைல் ஃபோன்களின் விலை 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com