3d printing
3d printingPT web

3D Printing மூலம் ராக்கெட் தயாரிப்பு.. சாதித்துக் காட்டிய சென்னை இளைஞர்கள்!

3டி பிரிண்டிங் தொழில் நுட்பத்தில் ராக்கெட்டை தயாரிக்க முடியும் என சென்னை இளைஞர்கள் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.
Published on

நவீன தொழில்நுட்ப யுகத்தில் செயற்கைக்கோள் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டநிலையில், ஒரு செயற்கைக்கோளினுடைய ஆயுள்காலம் 3 முதல் 5 ஆண்டுகள்தான். ஆயுட்காலத்தை முடிந்தபின் செயலிழக்கும் செயற்கைக்கோள்களுக்கு மாற்றாக மீண்டும் செயற்கைக்கோள்களை அனுப்புவதற்காக தொடர்ந்து ராக்கெட்கள் ஏவப்பட்டு வருகின்றன. அவ்வாறு வடிவமைக்கப்படும் ராக்கெட்டுகளுக்கு இன்ஜினை உருவாக்க மட்டும் ஆறு மாதங்கள் வரை ஆகிறது.

மொத்த ராக்கெட் வடிவமைப்பு மேற்கொண்டு அனைத்து விதமான தொழில்நுட்ப பாகங்கள் இணைக்கப்பட்டு செயலாற்றுவதற்கு ஒரு வருடம் வரை ஆகும் நிலையில், ராக்கெட் எஞ்சின் தயாரிப்பதற்கு 3d பிரிண்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறார்கள் சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த அக்னிகுல் நிறுவனத்தினர்.

2018 ஆம் ஆண்டு முதல் கிரையோஜனிக் இன்ஜின் தயாரிப்பிற்கான 3d பிரிண்ட் இயந்திரத்தை வடிவமைத்து வரும் நிலையில் கடந்த வருடம் 3d பிரிண்டிங் மூலம் முதல் கிரையோஜனிக் இன்ஜினை வடிவமைத்தார்கள். மூன்று நாட்களுக்குள் இன்ஜின் தயாராகிவிடுவதால் மொத்த ராக்கெட்டையும் 15 நாட்களுக்குள் வடிவமைக்க முடியும் என தெரிவிக்கிறார்கள்.

ஒரு அடுக்கு ராக்கெட் வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இரண்டடுக்கு கிரையோஜனிக் எஞ்சின் சோதனைகளும் நடைபெற்று வருகின்றன. வெவ்வேறு எடைகள் கொண்ட செயற்கைக்கோள்களை ஏந்திச் செல்லும் அளவிற்கு 3d பிரிண்டிங் இயந்திரம் மூலம் ராக்கெட் வடிவமைப்பில் குழுவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து முழுத் தகவல்களையும் அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com