பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றியில் முடிந்தது

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றியில் முடிந்தது
பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றியில் முடிந்தது

உலகின் அதிவேக குறைந்த தூர ஏவுகணையான பிரமோஸ் இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. 

சுகோய்-30 எம்.கே.ஐ போர் விமானத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை விண்ணில் சீறிப் பாய்ந்து இலக்கைத் தாக்கியது. இந்த சோதனை வெற்றி மூலம், இந்திய பாதுகாப்புத் துறையில் புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. அதிக எடை கொண்ட ஆயுதங்களைத் தாங்கிச் செல்லத்தக்க வகையில் சுகோய் -30 எம்.கே.ஐ போர் விமானத்தில் அண்மையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. 

அந்த போர் விமானத்தில் இரண்டரை டன் எடை கொண்ட பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த பரிசோதனை முயற்சி இந்திய விமானப்படையின் தொலைதூர தாக்குதல் திறனுக்கு பலமாக அமையும் என அவர் கூறினார்.   
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com