Tata  - Tesla
Tata - Teslafacebook

கார்களுக்கு ரூ.50,000 வரை தள்ளுபடி.. offers - ஐ அள்ளிவிட்ட Tata! Tesla-க்கு போட்டியாக அறிவிப்பா?

இந்தியாவின் முன்னணி மின்சார வாகன (EV) உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், 200,000 மின்சார வாகன விற்பனையைத் தாண்டியதைக் கொண்டாடும் வகையில் 45 நாட்களுக்கு சில முக்கிய சலுகைகளை அறிவித்துள்ளது
Published on

இந்தியாவில் டெஸ்லா தனது மின்சார வாகன விற்பனையை தொடங்குவதாக தகவல் வெளியாகிய நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களுடைய மின்சார கார்களுக்கு ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதோடு மேலும் பல சலுகைகளையும் அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி மின்சார வாகன (EV) உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ், 200,000 மின்சார வாகன விற்பனையைத் தாண்டியதைக் கொண்டாடும் வகையில் 45 நாட்களுக்கு சில முக்கிய சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ், zero down payment வசதியை பயன்படுத்தி முழு தொகையையும் கடனாக பெற்று டாடா மின்சார கார் வாங்குதல் உள்ளிட்டவைகள் இதில் அடங்கும்.

Nexon EV அல்லது Curvv EV வாங்குபவர்கள் Tata Power-ன் சார்ஜிங் நெட்வொர்க்கிற்கான ஆறு மாத இலவச complimentary access பெற முடியும். 7.2 kW AC கொண்ட வீட்டில் சார்ஜர் செய்யும் கருவிகள் இலவசமாக பொருத்தி தரப்படும்.

ஏற்கனவே உள்ள Tata வாடிக்கையாளர்கள் மேலும் சில வெகுமதிகளைப் பெறலாம். Nexon EV அல்லது Curvv EV க்கு மாற நினைக்கும் Tata EV உரிமையாளர்களுக்கு ரூ.50,000 போனஸ் கிடைக்கும். அதே நேரத்தில் EV க்கு மாறும் Tata ICE வாகன உரிமையாளர்களுக்கு ரூ.20,000 போனஸ் கிடைக்கும்.

Tata  - Tesla
ஸ்மார்ட்ஃபோன், கணினிகளுக்கு இனி தேவையே இருக்காது.. வருகிறது தொழில்நுட்ப உலகில் அடுத்த புரட்சி?

டாடா மோட்டார்ஸ் தற்போது இந்தியாவில் Tiago EV, Tigor EV, Punch EV, Nexon EV, and Curvv EV உள்ளிட்ட ஐந்து மின்சார மாடல்களை வழங்கி வருகிறது. இதன் விலை ரூ.7.99 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

2024 ஆம் ஆண்டில், டாடா மோட்டார்ஸ் 61,496 EV யூனிட்களை விற்பனை செய்தது. 2023ல் 60,100 ஆக கார் விற்பனை இருந்தது. இருப்பினும், அதன் சந்தைப் பங்கு 2023 இல் 73 சதவீதத்திலிருந்து 2024 இல் 62 சதவீதமாகக் குறைந்தது. Bharat Mobility Global Expo 2025ல், Harrier EV and மற்றும் Sierra EV உள்ளிட்ட அடுத்து வரவிருக்கும் மாடல்களையும் வெளியிட்டது.

தற்போது டெஸ்லா நிறுவனம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்தியாவில் தனது கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெர்லின் ஆலையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் டெஸ்லா தோராயமாக ரூ. 21 லட்சம் விலையில் மலிவான EV மாடல்களை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tata  - Tesla
முடக்கப்பட்ட 80 லட்சத்திற்கும் அதிகமான வாட்சப் கணக்குகள்!

இந்தியாவில் விற்பனையைத் தொடங்குவதற்கான சாத்தியமான இடங்களாக மும்பை மற்றும் டெல்லியை தேர்வு செய்துள்ளது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்லாவின் அடுத்தடுத்த நடவடிகளுக்கு இடையில் டாடாவின் சலுகைகள் மின்சார வாகன விற்பனையில் போட்டி தொடங்கியுள்ளதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com