அதிக நேரம் ஸ்பேஸ் வாக்... சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளிவந்து, மீண்டும் ஸ்பேஸ் வாக் செய்த சுனிதா வில்லியம்ஸ் அங்கு பணியை மேற்கொண்டு சாதனைப் படைத்துள்ளார்.
ரேடியோ தொலைத்தொடர்பு சீரமைப்புப் பணியில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் இணைந்து பணியாற்றினர். மிகுந்த பாதுகாப்புடன் நடைபெற்ற ஸ்பேஸ்வாக் 5 மணி நேரம் 26 நிமிடங்கள் நீடித்தன. 9 ஆவது முறையாக ஸ்பேஸ் வாக் செய்துள்ள சுனிதா வில்லியம்ஸ், இதுவரை விண்வெளியில் மட்டும் 62 மணி நேரம் 6 நிமிடங்களை கழித்துள்ளார்.
இதன் மூலம் அதிக நேரம் ஸ்பேஸ் வாக் செய்த பெண் என்ற சாதனைக்கு சுனிதா வில்லியம்ஸ் சொந்தக்காரராகியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர், 9 நாள்களில் திரும்பி வரவேண்டிய நிலையில், விண்கலன் கோளாறு காரணமாக தற்போது வரை பூமி திரும்பவில்லை. இச்சூழலில் சுனிதா மற்றும் பட்ச் ஒன்றாக ஸ்பேஸ் வாக் செய்துள்ளனர்.