சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் சென்னையில் மட்டும் முடங்கியுள்ளது.
இன்றைய இளைய தலைமுறையினரின் முக்கியமான ஊடகமாக இருப்பது ஃபேஸ்புக். சமூக வலைத்தளமான இந்த ஊடகம் வந்த பிறகுதான் உலக அளவில் தகவல் பரிமாற்றம் மாபெரும் வளர்ச்சியை அடைந்தது. இதன் பயனாளர்களால் இதன் உரிமையாளர் மார்க் மாபெரும் செல்வாக்குமிக்க மனிதராக உருவெடுத்தார். நாளுக்கு நாள் இதன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகின்றது. தகவல் பரிமாற்றத்தை தாண்டி பல்வேறு பொழுதுபோக்கு விஷயங்களும் இதில் நிரம்பி வழிவதால் இதற்கு பலர் அடிமையாகவே ஆகிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டையும் பலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் செல்போன் மற்றும் இணையதளத்தில் திடீரென்று ஃபேஸ்புக் முடங்கிப் போனது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதனால் இதன் பயனாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். சில மணிநேரங்கள் கழித்து இணையத்தில் மீண்டும் சீரானது. ஆனால் மொபைல் போன்களில் இந்தப் பிரச்னை தொடர்வதாக தெரிகிறது.