கட்டை விரல் மூலம் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டிக்டாக்கில் பிரபலமடைந்துள்ளார்.
இளைஞர்களை அதிகம் கவர்ந்த சமூக வலைத்தளங்களில் ஒன்றாக ‘டிக்டாக்’ செயலி இருந்து வருகிறது. இந்தச் செயலியில் இளைஞர்கள் மகிழ்ச்சியாக பாட்டு பாடி, நடனம் ஆடி தங்களின் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். பலர் தங்களது நடிப்புத் திறமையை டிக் டாக்கில் வெளிப்படுத்தி சினிமாவிலும் நடிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜாகோப் பினா என்ற இளைஞர் ஒருவர் தன்னுடைய கை கட்டை விரலை பயன்படுத்தி செய்யும் வித்தியாசமான டிக்டாக் வீடியோகளால் பிரபலமடைந்துள்ளார். இதில் சிறப்பு என்னவென்றால், அந்த இளைஞரின் கட்டை விரல் 5 இன்ச் நீளம் கொண்டதாக உள்ளது.
ஜாகோப்பின் கட்டை விரலை பார்க்கும் டிக்டாக் பயனாளர்கள் அனைவரும் முதலில் நம்புவதில்லை. ஆனால் பல வீடியோக்களை பகிர்ந்துள்ளதன் மூலம் கட்டை விரலின் நீளம் உண்மையானது தான் என ஜாகோப் உறுதிபடுத்தியுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள ஜாகோப், இது தான் என் கட்டைவிரல், இது நீளமானது. ஆமாம், இது உண்மையானது தான். எனது தெரிவித்துள்ளார்.
ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ள ஜாகோப், தன் கட்டை விரல் மூலமாகவே பிரபலமடைந்து வருகிறார். அவரது கட்டை விரலைக் கண்டு கமெண்ட் செய்யும் பலரும், இது கட்டை விரல் இல்லை வாள் என்றும், உங்களின் கட்டை விரலில் 3ல் ஒரு பங்கு தான் என் விரல் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.