செவ்வாய் கிரகம், நிலவில் இணைய சேவை..! ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஐடியா

செவ்வாய் கிரகம், நிலவில் இணைய சேவை..! ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஐடியா
செவ்வாய் கிரகம், நிலவில் இணைய சேவை..! ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஐடியா

ஸ்டார்ட்அப் நிறுவனம் செவ்வாய் கிரகம் மற்றும் நிலவில் இணைய சேவையை உருவாக்கும் பிரம்மாண்ட திட்டத்தை தீட்டிவருகிறது. 

நிலவில் முதல் மனிதன் தன் காலடித் தடத்தைப் பதித்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டன. சமீப காலமாக நாசா, ஸ்பேஸ் எக்ஸ் உட்பட உலகின் முன்னணி விண்வெளி நிறுவனங்கள் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பத் திட்டமிட்டு வருகின்றன. அங்கேயே மனிதர்கள் தங்குவதற்கான இடத்தைக் கட்டமைப்பதற்கான திட்டங்களும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று நிலவில் வைஃபை சேவையை வழங்குவதற்கான திட்டத்தை வெளியிட்டுள்ளது. அக்வாரியன் ஸ்பேஸ் (Aquarian Space) என்ற இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் வரும் 2024-ம் ஆண்டில் இந்த சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.

சோல்நெட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலமாக 100 Mbps வேகம் கொண்ட இணையச் சேவையை நிலவில் வழங்க அதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்படும் செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படும். நிலவிலிருந்தபடி மனிதர்கள், தானியங்கி ரோவர்கள் அதிவேக இணையச் சேவையை பயன்படுத்தி பூமியில் இருப்பவர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. " தற்போது நிலவிலும் அதன் சுற்று வட்டப்பாதையிலும் 13 லேண்டர்கள், ரோவர்கள் மற்றும் ஆர்பிட்டர்கள் இருக்கின்றன. 2030-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 200 ஆக உயரக்கூடும்.

எனவே நம்பகத்தன்மை வாய்ந்த, வேகமான இணையச் சேவை நமக்கு தேவைப்படலாம் " என்று அக்வாரியன் ஸ்பேஸின் CEO கெல்லி லார்சன் தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே இந்த திட்டத்திற்காக 5 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ள இந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்திலும் இணையச் சேவையை வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com