கலாம்சாட் -2 புதிய செயற்கைக்கோள்

கலாம்சாட் -2 புதிய செயற்கைக்கோள்

கலாம்சாட் -2 புதிய செயற்கைக்கோள்
Published on

அப்துல் கலாம் நினைவுதினத்தையொட்டி ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பு சார்பில் புதிய செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. 

கலாம்சாட்- 2 செயற்கைக்கோள் என்ற இந்த செயற்கைகோள் ஆகஸ்ட் 24ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. செயற்கைக்கோளில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளதாகவும், செயற்கைக்கோள் திரும்பி வந்ததும் அதிலுள்ள மடல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அளிக்கப்படும் என்று ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீமதி கேசவன் கூறினார்

ஆகஸ்ட் 24ம் தேதி நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்த பலூன் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த பலூன் செயற்கைக்கோளை இலவசமாக விண்ணில் செலுத்த நாசா ஒப்புக்கொண்டுள்ளது. மனிதர்கள் விண்வெளியில் சுற்றுலா செல்வது குறித்தும் இந்த செயற்கைக்கோள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com