Dulcibella camanchaca
Dulcibella camanchacaகூகுள்

’டெவில்-ஏலியன்ஸ்-இருள்’ மிரட்டும் பெயர்கள்! கடலில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய உயிரினம்! எங்கே தெரியுமா?

அட்டகாமா கடலில் கண்டுபிடிக்கப்பட்ட அறியவகை உயிரினம்... இதை சிலர் ஏலியன்ஸ், டெவில் , இருள் என்றும் கூறிவருகின்றனர்.
Published on

காதல் கவிதைகள் எழுதுபவர்கள் அடிக்கடி இந்த வார்த்தைகளை பயன்படுத்துவார்கள்.. ஆழ் கடலின் ஆழத்தில் உள்ளதை கூட அறிந்துவிட முடியும், பெண்ணின் உள்ளத்தில் என்ன உள்ளது என்பதை அறிய முடியுமா? என்பதுபோல் அந்த வரிகள் இருக்கும். ஆனால் உண்மை என்னவென்றால் உலகில் சுமார் 71 சதம் வீதர் கடல் நீரின் ஆழத்தில் என்ன இருக்கிறது என்பது குறித்து 95 சதவீதம் இன்னும் கண்டறியப்படவில்லை என்பதுதான் உண்மை. இத்தகைய சூழலில் தான் ஆழ்கடலில் இருந்து ஆச்சர்யத்தக்க விநோதமான உயிரினம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.

அட்டகாமா அகழியில் கண்டுபிடிக்கப்பட்ட அறியவகை உயிரினம்... ஏலியன்ஸ், டெவில் , இருள்.. பெயர்களை கேட்டாலே..

ஒரு புறம் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பூமி எப்படி தோன்றியது என்பதை ஆராய்ந்து வருகிறார்கள் என்றால், மறுபுறம், பூமியில் இருக்கும் தனிமங்கள், மற்றும் கடலின் ஆழம் அதில் வாழும் உயிரினங்கள், வெட்பதட்பநிலை என்று சில விஞ்ஞானிகள் வேறுவிதமாக ஆராய்ந்து வருகிறார்கள். இவர்களின் ஆராய்ச்சியின் பலனாக அவ்வப்போது சில அபூர்வ கண்டுபிடிப்புகளையும் கண்டறிந்து நமக்கு தெரிவித்து வருகின்றனர்.

Dulcibella camanchaca
கஞ்சா வழக்கில் ஆஜராகவில்லை... சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!

71 சதவீதம் இருக்கும் கடலில் என்ன இருக்கிறது அதன் ஆழம் என்ன அதன் வெப்பநிலை என்ன என்பதை அறிந்துக்கொள்ள விஞ்ஞானிகள் தொடர்ந்து முயன்று வருகின்றனர். கடலின் ஆழத்திற்குச் செல்ல செல்ல அதிக அழுத்தம் மற்றும் வெப்பநிலை காரணமாக அடி ஆழம் வரை செல்ல முடியாது. இதனால் 95% மேல் கடலானது இன்னும் ஆராயாப்படாமல் உள்ளது. அதனை ஆராய்ச்சி செய்யும் பணியில் பல ஆராய்ச்சியாளர்கள் இன்னமும் முனைப்புடன் ஈடுபட்டுக்கொண்டு இருக்கின்றனர்.

இதனிடையில், அமெரிக்கா மற்றும் சிலியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் சமீபத்திய ஆய்வின்படி, தென் அமெரிக்காவின் கடற்கரையில் அமைந்துள்ள அட்டகாமா அகழியில் (சிலி நாட்டின் அருகே), அவர்களே ஆச்சர்யப்படும் வகையில் ஒரு புதிய வகை ஆம்பிபோட்ஸ் என்ற உயிரினத்தை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த உயிரினத்துக்கு Dulcibella camanchaca என்று பெயரிட்டு உள்ளனர். இந்த வெளிர் Dulcibella camanchaca என்ற உயிரினத்தை டெவில் உயிரினம் அல்லது ஏலியன்ஸ் என்றும் கூறி வருகின்றனர். தென் அமெரிக்காவில் இதை ”இருள்” என்றும் கூறுகின்றனர்.

அதாவது இந்த உயிரினமானது நிலப்பரப்பிலிருந்து சுமார் 7,902 மீட்டர் ஆழத்தில், இருண்ட இடத்தில் அதீத வெப்பநிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அமெரிக்கர்கள் இதற்கு இருள் என்று பெயரிட்டு இருக்கலாம். இந்த இருளானது தனது உணவாக மற்ற உயிரினங்களை சாப்பிட்டு உயிர்வாழ்கிறது.மேலும் இது ஒரு வகை ஒட்டுமீன் இனத்தைச் சேர்ந்தது என்கிறார்கள்.

விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கும் ஆம்பிபோட்ஸ் உயிரினமானது ஆழ்கடலில் உள்ள உயினங்கள் மற்றும் வியாழனின் துணைக்கோளான யூரோபா மற்றும் என்செலடஸ் போன்ற பிற கிரகங்களில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பற்றிய முக்கிய நுண்ணறிவுகளை கண்டுபிடிக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com