ஐந்து ஸ்மார்ட்போன்களை லான்ச் செய்யும் சாம்சங் நிறுவனம்!

ஐந்து ஸ்மார்ட்போன்களை லான்ச் செய்யும் சாம்சங் நிறுவனம்!

ஐந்து ஸ்மார்ட்போன்களை லான்ச் செய்யும் சாம்சங் நிறுவனம்!

சாம்சங் நிறுவனம் விரைவில் ஐந்து புதிய ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. இது அந்நிறுவனத்தின் வெவ்வேறு நாடுகளின் அதிகாரபூர்வ தளங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேலக்சி F12, கேலக்சி F62, கேலக்சி M02, கேலக்சி A52, கேலக்சி A72 என ஐந்து மாடல்களை சாம்சங் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த போன்கள் அனைத்தும் பட்ஜெட் விலையில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கேலக்சி F12 மற்றும் கேலக்சி F62 போன்களை இந்தியாவில் பிளிப்கார்டுடன் சேர்ந்து சாம்சங் அறிமுகம் செய்ய உள்ளதாம். அதேபோல வரும் பிப்ரவரி 2 முதல் M02 ஸ்மார்ட்போனும் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. ஆஸ்திரியாவில் A52 5ஜி மாடலும், தாய்லாந்து மற்றும் கரீபியன் தீவில் A72 மாடலும் அறிமுகமாக உள்ளதாம். 

இதில் கேலக்சி F12 மற்றும் கேலக்சி F62 ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் மட்டும் பிரத்யேகமாக லான்ச் ஆகிறதாம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com