சோனி 'எக்ஸ்பெரியா எல்2' வெளியீடு: விலை, சிறப்பம்சங்கள்!

சோனி 'எக்ஸ்பெரியா எல்2' வெளியீடு: விலை, சிறப்பம்சங்கள்!

சோனி 'எக்ஸ்பெரியா எல்2' வெளியீடு: விலை, சிறப்பம்சங்கள்!
Published on

பிரபல நிறுவனமான சோனி தனது ‘எக்ஸ்பெரியா எல்2’ மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

தற்போது இந்திய சந்தைகளில் அதிகம் விற்பனை ஆகும் ஸ்மார்ட்போன்களுக்கு நிகராக, புதிய ஸ்மார்ட் ஒன்றை வெளியிட சோனி நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதன்படி ‘எக்ஸ்பெரியா எல்2’என்ற ஸ்மார்ட்போனை நேற்று அது வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.19.990 ஆகும்.

இதில் 13 எம்பி பின்புற கேமரா, 8 எம்பி முன்புற கேமரா உள்ளது. 3,300 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்ட இந்த போனில், கைவிரல் ரேகை பதிவு செய்யும் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதில் மீடியாடெக் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட எம்டி6737டி சிப்செட் மூலம் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 256 ஜிபி கூடுதல் ஸ்டோரேஜ்-ம் இதனுடன் இணைக்க முடியும். ஆண்ட்ராய்ட் நாகட் தளத்தில் இது இயங்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com