சட்டைக்குள் ஏசி - சோனி நிறுவனம் புதிய கண்டுபிடிப்பு  

சட்டைக்குள் ஏசி - சோனி நிறுவனம் புதிய கண்டுபிடிப்பு  

சட்டைக்குள் ஏசி - சோனி நிறுவனம் புதிய கண்டுபிடிப்பு  
Published on

ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல சோனி நிறுவனமானது சட்டைக்குள் பொருத்திக்கொள்ளும் சிறிய அளவிளான ஏசியை அறிமுகம் செய்யவுள்ளது.

கோடை காலத்தில் வாட்டி வதைக்கும் வெயிலிருந்து தப்பிக்க மக்கள் ஏசி, ஏர் கூலர் உள்ளிட்டவற்றை நாடுவது‌ வழக்கம். அந்தவகையில் சோனி நிறுவனமானது மொபைல்போன் அளவிலான மிகச்சிறிய ஏசியை தயாரித்துவருகிறது. ‘அணிந்து கொள்ளப்படும் ஏசி’Wearable Air conditioner எனப்படும் அந்தச் சிறிய ஏசிக்கு ‘ரீயான் பாகெட்’ (Reon Pocket) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த மினி ஏசியில் ரியர் பேனல் வழியாகத் தான் குளிர்ந்த காற்று வெளியாகும் என சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த ஏசியை அணிந்து கொள்வதற்கு‌ ஒரு பிரத்யேக டி. ஷர்ட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மினி ஏசியுடன் சேர்த்து இந்த டி.ஷர்ட் விற்கப்படும். டி. ஷர்ட்டின் பின்புறமுள்ள ஏசியை, ஸ்மார்ட்போனில் இணைத்து அதன் மூலமும் இயக்கலாம்.

பேட்டரி மூலம் இயங்கும் ‘ரீயான் பாகெட்’ மினி ஏசியை இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்தால் 90 நிமிடங்கள் வரை குளிர்ந்த காற்றை அனுபவிக்கலாம். இந்த ஸ்மார்ட் ஏசியின் விலை இந்திய மதிப்பில் சுமார் 9 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் ஜப்பானில் விற்பனை செய்யப்படவுள்ள இந்த மினி ஏசி விரைவில் இந்திய சந்தையிலும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com