டெக்
வட அமெரிக்காவில் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்!
வட அமெரிக்காவில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ளது.
சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் ஏற்படுகின்றன. அதில் பூமி மற்றும் சூரியனுக்கு இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான முழு சூரிய கிரகணம் நேற்று நிகழ்ந்தது. தென்மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் முழு சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ளது.
இந்திய நேரப்படி இரவு நேரத்தில் சூரிய கிரகணம் நடைபெற்றதால் இந்தியாவில் சூரிய கிரகணத்தை காண முடியவில்லை.
கனடா, மெக்சிகோ மற்றும் வட அமெரிக்க நாடுகளில் சூரிய கிரகணகனத்தை மக்கள் முழுமையாக கண்டு ரசித்தனர்.