OPPO Reno10 5G | Portrait புகைப்படங்கள் ஸ்பெஷலிஸ்ட்டா இந்த RENO 10 5G..?

Reno10 5G ரூ. 32,999/-க்கு விற்பனைக்கு வரவுள்ளது.
OPPO Reno10 5G
OPPO Reno10 5GOppo

3D Curved டிசைன்

மிகவும் மெலிதான அல்ட்ரா-ஸ்லிம் வடிவில் வரும் இந்த Reno10 5G ஸ்மார்ட்போன் – ICE BLUE மற்றும் SILVER GREY ஆகிய நிறங்களில் கிடைக்கிறது – மேலும், 3D Curved வடிவமைப்புடன் வரும் இந்த மொபைல் எடை குறைவானதாகவும், பிடிப்பதற்கு எளிதானதாகவும் இருக்கிறது. 120Hz 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே மற்றும் 93% ஸ்கிரீன்-டூ-பாடி விகிதத்துடன் வருவதால் காட்சிகளுக்கு உள்ளே சென்று பார்ப்பது போன்ற அனுபவம் கிடைக்கும். இது  Dragontrail Star 2 டிஸ்பிளே மற்றும் உறுதியான பாலிகார்பனேட் பின்புறத்துடனும் வருகிறது. இதன் 2412×1080px ஸ்க்ரீன், 1 பில்லியன் வண்ணங்களை, 950nits பிரைட்னஸில் மிகத் தெளிவான மற்றும் துல்லியமான காட்சிகளை, நேரடியான சூரிய வெளிச்சத்தின் கீழ் காட்டும் திறன் கொண்டது. அதுமட்டுமில்லாமல், இதில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் – ரியல் ஒரிஜினல் சவுண்ட் டெக்னாலஜியுடன் வருகிறது, மற்றும் சிறந்த சரவுண்ட் சவுண்ட் அனுபவத்திற்காக Dirac சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

தெளிவான Portrait புகைப்படங்கள்

OPPO Reno10 5G
OPPO Reno10 5GOPPO

இந்த Reno10 5G-யின் ஆற்றல்மிக்க கேமரா சிஸ்டத்தில் ஒரு 64MP OV64B அல்ட்ரா-கிளியர் மெயின் கேமரா, ஒரு 32MP IMX709 டெலிபோட்டோ போர்ட்ரைட் கேமரா, ஒரு 8MP IMX355 112° அல்ட்ரா-வைடு கேமரா, மற்றும் ஒரு 32MP OV32C அல்ட்ரா-கிளியர் செல்ஃபி கேமரா ஆகியன உள்ளன. இந்த அசத்தலான கேமரா அமைப்புகளின் மூலம், போர்ட்ரைட் புகைப்படங்களை எடுக்கையில் பயனாளர்கள் ஒவ்வொரு படங்களையும் துல்லியமான காட்சி விவரங்களுடன், அற்புதமான தெளிவுடன், குறைவான வெளிச்சத்தில் அல்டிரா ஒய்டு ஷாட்களை படமாக்கலாம்.

சிறப்பான சார்ஜிங் அனுபவம்

OPPO Reno10 5G
OPPO Reno10 5GOPPO

ஒப்போவின் Reno சீரிஸிலேயே மிகப்பெரிய 5000mAh பேட்டரியுடன் வரும் இந்த மொபைலில் 67W SUPERVOOC தொழில்நுட்பத்தின் மூலம் வெறும் 47 நிமிடங்களில் 100% சார்ஜ் செய்ய முடியும். 30 நிமிடத்தில் ஒரு வேலை நாளுக்குத் தேவையான 70% சார்ஜினை நிரப்புகிறது. 

கூடுதலாக, OPPO-வின் பேட்டரி ஹெல்த் என்ஜின் (BHE), அறிவார்ந்த முறையில் இதன் மின்னோட்டம் மற்றும் வோல்டேஜை கட்டுப்படுத்துவதோடு, நிகழ்-நேர கண்காணிப்பின் மூலம் சார்ஜிங் ஆயுளையும் நீட்டிக்கிறது. 1,600 சார்ஜிங் சுழற்சிகளுக்குப் பிறகும் சாதனத்தின் பேட்டரி அதன் நலனை 80% சதவீதத்திற்கும் மேலாக வைத்திருக்க உதவும் இத்தொழில்நுட்பம், அதனை நான்கு ஆண்டுகள் வரை நீடித்து உழைக்க வைக்கிறது. 

அட்டகாசமான செயல்திறன்

48-Month

Fluency Protection
48-Month Fluency ProtectionOPPO

Reno10 5G ஸ்மார்ட்போன், மீடியாடெக் டைமென்சிட்டி 7050 SoC (MediaTek Dimensity) புராஸசர் மற்றும் 8GB RAM, 256GB ஸ்டோரேஜூடன் வருகிறது. மேலும், OPPO'வின் RAM எக்ஸ்பேன்ஷன் தொழில்நுட்பமானது பயனர்களுக்கு RAM-ஐ மேலும் 8GB வரை சாதனத்தின் ஸ்டோரேஜிலிருந்து பெற்று விரிவாக்கி பயன்படுத்த அனுமதிக்கிறது. அதாவது உங்கள் மொபைலில் இருக்கும் RAM அளவு முழுமை அடைந்துவிட்டால், உங்களின் ஸ்டோரேஜ் ஸ்பேஸில் இருந்து 8 GB வரை RAMஆக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மொபைலை சிறப்பாக குளிர்விப்பதற்காக T19 bi-layer கிராஃபைட் உள்ளதால், தங்குதடையின்றி மொபைலைப் பயன்படுத்த முடியும். Reno10 5G ஸ்மார்ட்போனில் உள்ள OPPO-வின் டைனமிக் கம்ப்யூட்டிங் என்ஜின், அதன் முந்தைய ஜெனரேஷனுடன் ஒப்பிடுகையில் செயலிகளை திறப்பதற்கான வேகத்தை 12% வரை அதிகரிக்கிறது. அதுமட்டுமில்லாமல், இந்த சாதனம் 48-மாத-ஃப்ளூயன்சியுடன் வருகிறது, அதாவது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் சாதனம் புதிய போனைப் போலவே சீராக செயல்படும். 

ஸ்மார்ட் அனுபவங்கள்

IR Control
IR ControlOPPO

இந்த Reno10 5G ஸ்மார்ட்போன் ஒரு இன்ஃப்ரா ரெட் ரிமோட் கன்ட்ரோல் செயலியுடன் வருவதால், உங்கள் வீட்டில் உள்ள டிவி, ஏசி, மற்றும் செட்-டாப் பாக்ஸ் போன்ற பல சாதனங்களை இயக்கலாம். மல்டி-ஸ்கிரீன் கனெக்ட் அம்சத்தின் மூலம், Reno10 5G-ஐ கணினி, அல்லது டேப்லட் போன்ற மற்ற சாதனங்களுடன் இணைக்க முடிவதால், பயனாளர்கள் ஒரே நேரத்தில் பல்வேறு ஸ்கிரீன்களில் பணியாற்ற முடியும். இதன் ஸ்மார்ட் ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே அம்சம் பயனாளர்களுக்கு போனை அன்லாக் செய்யாமலேயே - ஸ்விகி மற்றும் சொமாட்டோ போன்ற உணவு டெலிவரி ஆப்களின் அப்டேட்களை எப்போதும் பார்ப்பதற்கும், Spotify இசையை கன்ட்ரோல் செய்யவும் அனுமதிக்கிறது.

Reno10 5G இரண்டு வருட OS அப்டேட்கள் மற்றும் மூன்று ஆண்டு செக்யூரிட்டி அப்டேட்களுக்கான உத்திரவாதத்துடன் வருகிறது.  

சலுகைகள்

OPPO Reno10 5G-யின் முதல் விற்பனையில் வாடிக்கையாளர்கள் பின்வரும் சலுகைகளைப் பெறலாம்: 

  • ஃபிளிப்கார்ட் மற்றும் OPPO ஸ்டோர்களில், HDFC, ICICI பேங்க், ஆக்சிஸ் பேங்க் மற்றும் SBI வங்கி கார்டுகளைப் பயன்படுத்தும் போது வாடிக்கையாளர்கள் உடனடியாக ரூ.3000 தள்ளுபடியைப் பெறலாம். கூடுதலாக, முன்னணி வங்கிகளின் கார்டுகளை வைத்திருப்பவர்கள் 6 மாதங்கள் வரை கூடுதல் கட்டணமில்லா மாதாந்திர சுலபத்தவணை (EMI) முறையில் சாதனத்தை வாங்கி பயன்பெறலாம்.

  • முன்னணி ரீடெயில் ஸ்டோர்களில் SBI, கோடக் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, IDFC ஃபர்ஸ்ட் பேங்க், ஒன் கார்டு மற்றும் AU ஸ்மால் ஃபைனான்ஸ் போன்ற முன்னணி வங்கிகளிடமிருந்து 6 மாதங்கள் வரை கூடுதல் கட்டணமில்லா மாதாந்திர சுலபத்தவணை (EMI) முறையிலும், 10% வரை கேஷ்பேக்குடனும் வாடிக்கையாளர்கள்  இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

  • OPPO வாடிக்கையாளர்கள் ரூ.4000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் + லாயல்டி போனஸை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் பெறலாம். 

  • MyOPPO மூலம் பயனாளர்கள், 3 மாதங்கள் வரை யூடியூப் ப்ரீமியம் மற்றும் கூகுள் ஒன் ஆகியவற்றில் இலவச அணுகலை பெற்று மகிழ முடியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com