Trump Organization launches Trump T1 mobile
Trump Mobile T1Trump Mobile

வந்தாச்சு டிரம்ப் மொபைல்... இதில் அப்படி என்ன ஸ்பெஷல்..?

இதில் சீன உதிரிபாகங்கள் இருக்க வாய்ப்புக்கள் அதிகம் என டெக் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் இந்த மொபைல் சந்தைக்கு வரவிருக்கிறது.
Published on

டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்வான நாள் முதலே அதிரடி சரவெடி அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறார். டிரம்ப் காயின் என பிட்காயின் வெளியிட்டு, பிட் காயின் உலகில் பலரை ஓவர்நைட்டில் கோடீஸ்வரர் ஆக்கினார் டிரம்ப். அந்த வரிசையில் இப்போது டிரம்ப் மொபைல் வெளியாகவிருக்கிறது. ஆனால், இதில் ஒரு சின்ன ட்விஸ்ட். முதலில் இந்த மொபைலில் என்ன இருக்கிறது என பார்க்கலாம். 

Trump T1 Mobile என்பது Trump Organizationஆல் வெளியிடப்பட்ட ஒரு தங்க நிற finish உடைய Android smartphone ஆகும். 499 அமெரிக்க டாலர்களுக்கு இந்த மொபைல் விற்கப்படுகிறது. 6.8-inch AMOLED display மற்றும் 120Hz refresh rate உடன், மென்மையான மற்றும் immersive viewing experience ஐ வழங்குகிறது. இந்த phone Android 15ல் இயங்குகிறது .12GB RAM மற்றும் 256GB internal storage உடன் வருகிறது. மெமரி ஸ்டோரேஜை microSD card slot மூலம் விரிவாக்கிக் கொள்ளலாம். இந்த device ஐ 5,000mAh battery சக்தியூட்டுகிறது.20W பாஸ்ட் சார்ஜர் மூலம் மொபைலை சார்ஜ் செய்து கொள்ளலாம். ஒரு நாளுக்குத் தேவையான சார்ஜை இதன் மூலம் நாம் எளிதாக பெற முடியும்.  புகைப்பட செக்சனை  triple rear camera setup அலங்கரிக்கிறது.  50-megapixel main sensor உடன், 2MP depth மற்றும் macro lenses உடன் வருகிறது. முன்பக்கத்தில், punch-hole cutout இல் அமைக்கப்பட்ட 16MP selfie camera உள்ளது. பாதுகாப்பு அம்சங்களாக in-display fingerprint sensor மற்றும் AI Face Unlock வசதி தரப்பட்டிருக்கிறது.  3.5mm headphone jack மற்றும் USB Type-C port என பல connectivity optionsஐயும் வழங்கியிருக்கிறார்கள். தற்போது வெளியாகும் பல மொபைல்களில் 3.5mm jack இல்லாத சூழலில் , T1 மொபைலில் இந்த வசதி தரப்பட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

T1 Mobile "47 Plan" உடன் விற்கப்படுகிறது, இது ஒரு wireless service ஆகும், இதன் மூலம் அன்லிமிட்டட் கால், டேட்டா, டெக்ஸ்ட் வசதிகளை  மாதத்திற்கு 47.45 அமெரிக்க டாலர்களுக்கு பெற முடியும்.  மேலும் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு international calling, roadside assistance, மற்றும் telehealth benefits ஐ வழங்குகிறது. Trump Organization இந்த T1 மொபைலை "designed and built in the United States" என்று விளம்பரப்படுத்துகிறது. ஆனால், இதில் சீன உதிரிபாகங்கள் இருக்க வாய்ப்புக்கள் அதிகம் என டெக் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் இந்த மொபைல் சந்தைக்கு வரவிருக்கிறது. 

சரி, அந்த ட்விஸ்ட் என்ன என்று கேட்கிறீர்களா. இந்த மொபைலில் இருக்கும் TRUMP பெயரை டொனால்டு டிரம்ப்பின் நிர்வாகமான TRUMP ORGANIZATION அனுமதியுடன் வேறொரு நிறுவனம் பயன்படுத்தி மொபைல்களை வெளியிடுகிறதாம். நேரடியாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கும் இந்த மொபைலுக்கு எந்த சம்மந்தமும் இல்லை என விளக்கமளித்திருக்கிறது TRUMP ORGANIZATION.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com