
ஒயர்லெஸ் ஹெட்செட், TWS ஹெட்செத் போன்றவை 3000 ரூபாய்க்கு மேல் விற்றுக்கொண்டிருந்தபோது, தடாலென கம்மி விலையில் பல ஹெட்செட்கள் மார்க்கெட்டுக்குள் குதித்தன. போட்டியை சமாளிக்க முடியாமல், புது புது வசதிகளை ஒயர்லெஸ் ஹெட்செட்களில் நிறுவனங்கள் கொடுக்க ஆரம்பித்தன . Boult போன்ற நிறுவனங்கள் Made In India என்ற டேக்லைனுடன் கம்மி விலையில் ஒயர்லெஸ் , TWS ஹெட்செட்களை இறக்க உண்மையில் கதிகலங்கித்தான் போயின மற்ற நிறுவனங்கள்.
dedicated மைக்குடன் கூடிய ANC
Dual Pairing
IPX5 Water Resistant
12mm BoomX டிரைவர்
ENC
30 மணி நேர பிளேபேக் வசதி (ANC)
60 ms Low Latency
Bluetooth 5.3
இந்த ஹெட்செட்டில் இருக்கும் Dual Pairing வசதியுடன் இரண்டு கேட்ஜெட்களில் உங்களால் உங்களின் ஹெட்செட்டை இணைத்துக்கொள்ள முடியும். இதன்மூலம் சுலபமாக ஸ்விட்ச் செய்துகொள்ளலாம்.
இந்த ஹெட்செட்டின் மற்றுமொரு சிறப்பமசம் அதிலிருக்கும் ANC. இந்த விலையில் ANC, ENC இரண்டும் இருக்கும் ஹெட்செட்கள் மிகக்குறைவு. ENC எனப்படும் Environmental Noise Cancellation மற்றவருடன் பேசும்போது சுற்றுசூழலிருக்கும் சத்தங்களை குறைக்க உதவுகிறது. கால் பேசும்போதும், பாடல்கள் கேட்கும் போதும் இந்த வசதிகள் நன்றாகவே பயன்படுகின்றன.
ப்ளூடூத் வெர்சன் 5.3 இருப்பதால் 10 மீட்டர் தொலைவிலும் இது சிறப்பாகவே இயங்குகிறது. 25db வரை noise cancellation செய்யும் என சொல்லப்பட்டாலும், ANC அவ்வளவு சிறப்பாக இல்லை. இன்னும் அதில் கவனம் செலுத்தியிருக்கலாம். 60ms low latency இருப்பதால் வீடியோ கேம் விளையாடும் போது எந்தவித தொய்வுமின்றி சிறப்பானதாக இருக்கிறது.
Curve ANCன் பேட்டரி பேக்கப் சிறப்பானதாகவே இருக்கிறது. ANC ஆன் மோடிலும் 30 மணி நேரம் பயன்படுத்தமுடிகிறது. ANCஐ ஆஃப் செய்வதன் மூலம், அதை மேலும் சில மணி நேரங்களுக்கு நீட்டிக்க முடிகிறது. 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே 10 மணி நேரம் வரை பயன்படுத்த முடிகிறது.
Curve ANCயில் இருக்கும் கவர்ச்சிகரமான விஷயமே அதன் விலை தான். 1499 என்னும் பட்ஜெட்டில் நிறைய நல்ல வசதிகளை இந்த ஹெட்செட் கொண்டிருக்கிறது. அதே சமயம், அதிலிருக்கும் மேக்னடிக் ஸ்விட்ச்சில் இன்னும் வசதிகளைச் சேர்த்திருக்கலாம். ANCஐ இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். CURVE ANCன் பிரச்னை இவை இரண்டும் தான்.