விற்பனையில் அசத்தும் ஐபோன் 16.. இந்திய சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனை 8% அதிகரிப்பு!
இந்தியாவில் ஸ்மார்ட் போன்களின் விற்பனை 8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் சரிவில் இருந்த விற்பனை, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 2ஆவது காலாண்டில் 8 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மொத்த விற்பனை மதிப்பும் 18 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஐபோன் 16 அதிகம் விற்பனையான ஸ்மார்ட் போனாக உள்ளது. விற்பனை அளவில் விவோ 20சதவிகிதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடம் 16 சதவிகிதத்துடன் சாம்சங் போன்களுக்குதான். ஓப்போ 13 சதவிகிதத்துடன் 3ஆவது இடத்திலும், ரியல் மி 10 சதவிதத்துடன் 4ஆவது இடத்திலும் உள்ளது. ஷாவ்மி போன்கள் 5ஆவது இடத்திலும் உள்ளன.
அதேசமயம் மொத்த விற்பனையை பொறுத்தவரை சாம்சங் மற்றும் ஆப்பிள் தலா 23 சதவிகிதத்துடன் முதல் இடத்தில் உள்ளன. 45ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள அல்ட்ரா பிரீமியம் பிரிவு ஸ்மார்ட் போன் விற்பனை 37 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் சந்தை மதிப்பு அடிப்படையில் இதுவரை இல்லாத மிகச்சிறந்த விற்பனை காலாண்டாக ஏப்ரல் முதல் ஜூன் வரை இருந்துள்ளதாக கவுண்டர் பாயிண்ட் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.