ஒரு சில விநாடிகளில் ஸ்மார்ட்போன் சார்ஜிங்

ஒரு சில விநாடிகளில் ஸ்மார்ட்போன் சார்ஜிங்

ஒரு சில விநாடிகளில் ஸ்மார்ட்போன் சார்ஜிங்
Published on

ஸ்மார்ட்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் சாதனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளை சில விநாடிகளில் சார்ஜ் செய்யும் வகையிலான மெக்சின் (MXene) என்ற புதிய எலக்ரோட் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவின் பிலிப்பேடியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ள மெக்சின் எலக்ரோட்கள், தற்போதைய லித்தியம்-அயான் பேட்டரிகளுக்குப் பதிலாக எதிர்காலத்தில் பயன்படுத்தப்படும். பேட்டரிகளின் முக்கியமான பாகமாகக் கருதப்படும் எலக்ரோட்களே, பேட்டரிகளின் ஆயுளைத் தீர்மானிக்கின்றன. சார்ஜ் செய்யும்போது ஆற்றலானது இந்த எலக்ரோடிலே சேமிக்கப்படுகிறது, அத்துடன், எலெக்ட்ரானிக் சாதனங்களுக்குத் தேவையான ஆற்றலும் இதன்மூலமே விநியோகிக்கப்படுகிறது. 
விரைவான மின்கடத்துத் திறன் கொண்ட மெக்சின் மூலம் பேட்டரிகளை சில விநாடிகளில் சார்ஜ் செய்துவிட முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதன்மூலம் விரைவாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வகையிலும், அதிகப்படியான ஆற்றலை சேமிக்கும் வகையிலும் பேட்டரிகளை உருவாக்க முடியும் என்றும் கூறுகிறார்கள். மெக்சின் மூலம் தயாரிக்கப்பட்ட எலெக்ரோடுகளை ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் சார்ஜ் செய்து அசத்தியிருக்கிறார்கள் பிலிப்பேடியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள். இதனால், மெக்சின் எலெக்ரோட் பேட்டரிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிடுவதே பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனாளர்களின் மிகப்பெரிய குறையாக இருந்து வருகிறது.  அதைத் தீர்க்க வருகிறது மெக்சின்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com