2ஜிக்கு குட்பை சொன்ன சிங்கப்பூர்

2ஜிக்கு குட்பை சொன்ன சிங்கப்பூர்

2ஜிக்கு குட்பை சொன்ன சிங்கப்பூர்
Published on

சிங்கப்பூரில் வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து 2ஜி தகவல் தொடர்பு சேவை ‌நீக்கப்படும் என அந்நாட்டு ஊடக மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

இந்தாண்டு ஜனவரி மாதத்தில், 2ஜி சேவையை வழங்கும் மொபைல் விற்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டது. அந்த ரக மொபைல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், 3ஜி, 4ஜி மொபைலுக்கு மாறிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் உள்ள சிங்டெல் (SINGTEL), ஸ்டார் ஹப் (STAR HUB), எம்1 (M1) ஆகிய மொபைல் அலைவரிசை சேவை நிறுவனங்கள் தங்களின் 2ஜி சேவையை வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நிறுத்திக்கொள்வதாக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. ஏப்ரல் 18ஆம் தேதிக்குள் 2ஜி சேவை முழுமையாக நீக்கப்படும் எனத் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com