\
layoffs
layoffsgoogle gemeni

ஆரக்கிள் நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி.. ’இதுதான் உங்களின் கடைசி நாள்’ 2,500 ஊழியர்கள் பணிநீக்கம்?

ஆரக்கிள் நிறுவனம் இந்தியாவில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Published on
Summary

இந்தியாவில் செயல்படும் முன்னணி மென்பொருள் நிறுவனம் ஆரக்கிள், நிறுவன மறுசீரமைப்பு மற்றும் வர்த்தகத் தேவைகளை காரணம் காட்டி சுமார் 2,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

முன்னணி மென்பொருள் நிறுவனமான ஆரக்கிள் (Oracle) இந்தியாவில் பணியாற்றும் சுமார் 2 ஆயிரத்து 500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கிளவுட் சேவைகள், மென்பொருள் மேம்பாடு பிரிவுகளில் பணியாற்றும் இந்திய ஊழியர்கள் பெருமளவில் பாதிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.

Oracle Company announces layoffs
Oraclereuters

அந்தவகையில் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமான ஆரக்கிள் (Oracle) தனது ஊழியர்களுக்குக் காலை 6 மணிக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், "இன்றே உங்களின் கடைசி வேலை நாள்" எனக் கூறி உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நிறுவனத்தின் மறுசீரமைப்பு மற்றும் வர்த்தகத் தேவைகளைக் காரணம் காட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவுள்ளதுடன், அவர்களின் கணினி அணுகல்களும் உடனடியாகத் துண்டிக்கப்பட்டு வருகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com