செப்டம்பர் ஸ்பெஷல் : மூன்று புது போன்களை வெளியிடும் ஆப்பிள் நிறுவனம்

செப்டம்பர் ஸ்பெஷல் : மூன்று புது போன்களை வெளியிடும் ஆப்பிள் நிறுவனம்
செப்டம்பர் ஸ்பெஷல் : மூன்று புது போன்களை வெளியிடும் ஆப்பிள் நிறுவனம்

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் புதிய படைப்புகளை வெளியிடும் ஆப்பிள் நிறுவனம் இம்முறையும் புது மாடல்களை வெளியிடவுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையிடமான கலிஃபோர்னியாவில் நடைபெறும் ஆப்பிளின் வருடாந்திர அறிமுக விழாவில் புதிய மாடல் மொபைல்கள், ஆப்பிள் வாட்ச், மேக்புக் மற்றும் ஐபேட் ஆகியவை அறிமுகப்படுத்தப்படவுள்ளன. நாளை நடைபெறவிருக்கும் இந்த விழாவை ஆப்பிள் நிறுவனம் ட்விட்டரில் லைவ் ஸ்டீரிமிங் செய்கிறது.

இளைஞர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகிய 3 புதிய மாடல் மொபைல்களை வெளியிடவுள்ளது. ஐபோன் 11 மாடல் A13 சிப் திறனுடன் ஃபேஸ் ஐடி, இரட்டை பின்புற கேமரா, 6.1 இன்ச்‌ டிஸ்பிளே, வயர்லஸ் சார்ஜிங் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்திருப்பதால், வாடிக்கையாளர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

ஐபோன் 11 ப்ரோவில் 5.8 இன்ச் டிஸ்பிளேவுடனும், ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மட்டும் 6.5 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் மூன்று முன்புற கேமராக்களுடனும் வெளியாகவுள்ளது. மூன்று மாடல்களும் 5ஜி தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் ஆப்பிள் 5 சீரிஸ் வாட்சுகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இது முந்தைய வாட்ச் சீரிஸ் மாடல்களை பெரிதாகவும், ஓஎல்இடி மற்றும் அனலாக் பேஸ் தொழில்நுட்பத்துடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாட்ச் மைக்ரோ போனாக பயன்படுத்தும் வகையிலும், அதில் நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டுள்ளன. நாளை அறிமுகப்படுத்தப்படும் இந்த மொபைல்கள் டிசம்பர் மாதம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com