ஐன்ஸ்டீனின் "ஜிக்-ஜாக்" கோட்பாட்டை சரி என நிரூபிக்கும் ஜேம்ஸ் வெப் எடுத்த படம்- விஞ்ஞானிகள் கருத்து!
ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்பைப் பயன்படுத்தி, வானியலாளர்கள் முதல் "ஐன்ஸ்டீன் ஜிக்-ஜாக்" என்ற கோட்பாடு சரி என்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது ஒரு குவாசரின் (அதிகம் ஒளிரும் நட்சத்திரக்கூட்டம்) படத்தை எடுத்துள்ளது. இந்தப்படத்தில் ஒரு நட்சத்திரமானது ஆறு முறை மீண்டும் மீண்டும் தெரிகிறது. இதன் மூலம் 1915 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனால் முன்மொழியப்பட்ட "ஈர்ப்பு லென்சிங்" என்று அழைக்கப்படும் ஒரு விளைவின் காரணமாக இந்த ஏற்பாடு உருவாக்கப்பட்டது.
மேலும், இது விஞ்ஞானிகளுக்கு அண்டவியல் நெருக்கடியைத் தவிர்க்க உதவும். இது குறித்து, indian institute of science education and research Mohali பேராசிரியராக பணியாற்றும் Dr.த.வி. வெங்கடேசன் நம்மிடையே பேசும் பொழுது,
”1915ல் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் albert einstein general theory of relativity equation என்ற பொது சார்பியல் தத்துவத்தை வெளியிட்டார். அதில் ஒரு முக்கியமான விளக்கத்தையும் தெரிவித்து இருந்தார். அதன்படி ஒரு பொருள் அதிக நிறையுடன் இருந்தால் அப்பொருள் ஒளியை வலைக்கும் என்றார்.
ஒளியை வளைக்கும் பொருட்களை இயல்பு வாழ்க்கையில் நாம் பார்த்து இருக்கிறோம். உதாரணத்திற்கு லென்ஸை சொல்லலாம். குவி லென்ஸில் ஒளியை குவித்து அதன் அடர்த்தியை அதிகரிக்கச்செய்யும்.
அதே போல் பூமியிலிருந்து மிகத்தொலைவில் ஏதாவது ஒரு வான் பொருள் இருந்தால், அந்த வான் பொருளுக்கும் பூமிக்கும் இடையில் அதிக நிறைக்கொண்ட பொருள் இருந்தால் அந்த நிறைக்கொண்ட பொருள் லென்ஸ் மாதிரி செயல்பட்டு தொலைவில் இருக்கக்கூடிய அந்த வான் பொருளின் ஒளியை வளைத்து நமது பக்கம் திருப்பும். அப்பொழுது ஒன்றுக்கு பதில் பல உருவங்கள் தெரியும்.
அதாவது ஒரு அறைக்குள் சுற்றி இருக்கும் கண்ணாடியில் பல பிம்பங்கள் தெரிவது போல.. தொலைவில் இருக்கும் வான் பொருளிலிருந்து வரக்கூடிய ஒளிக்கற்றைகள் பல்வேறு திசைகளில் வளைந்து நமது பூமியை நோக்கி வரும் பொழுது அந்தப் பொருள் பலவாறாக காட்சித் தரும். இப்படிப்பற்ற ஒன்றை einstein zigzag என்று கூறுகிறார்கள். இவரின் இக்கோட்பாடு உண்மையானது என்று வானிலையாளர்கள் கூறுகின்றனர்.
முதன் முறையாக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது Quasars (மிகவும் அதிகமாக ஒளிரும் விண்மீன் கூட்டம்) எனப்படும் j1721+8842 என்ற விண்மீனை ஆறு உருவங்களாகத் தென்படக்கூடிய ஒன்றைகண்டுப்பிடித்து சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் ஐன்ஸ்டீன் (einstein) தத்துவம் எவ்வளவு சரியானது என்பதை தெரிந்துக்கொள்வதுடன், பிரபஞ்சத்தில் உள்ள இரு முக்கிய செய்தியான (dark energy ) இருள் ஆற்றல் மற்றும்(haubble constant) ஹப்பிள் வரையறை ஆகிய இரண்டையும் மதிப்பீடு செய்வதற்கு உதவும் என்று கருதுகிறார்கள். ஆய்வாளர்களின் அடுத்தடுத்த ஆய்வுகளில் இது குறித்து இன்னும் நமக்கு தெளிவாகும்” என்று கூறியுள்ளார்.